கோயிலுக்கு செல்லும் முன் அசைவம் சாப்பிடக்கூடாது.. ஏன் தெரியுமா...?

 Friday, March 15, 2019  03:41 PM   No Comments

நாம் சாப்பிடும் உணவின் அடிப்படையிலேயே நமது உடல் செயல்படுகிறது. உதாரணமாக பொங்கல், தயிர் போன்ற உணவுகளை சாப்பிடுவதால் உடல் மந்த நிலையை அடைவதும் காரம் அதிகமாக சாப்பிட்டால் கோவம் அதிகமாக வருவதையும் நம்மால் உணர முடியும்.



அசைவ உணவுகள் ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக்கொள்வதால் அது உடலுக்கு மந்த நிலையை ஏற்படுத்தும். கோயிலுக்கு செல்லும் போது சுத்தமாக செல்ல வேண்டும். சுத்தம் என்பது உடலை மட்டும் குறிப்பதல்ல மனதையும் சேர்த்து தான் குறிக்கிறது. மனதளவில் மந்த நிலையில் உள்ள ஒரு நபர் கோயிலுக்கு செல்லும் போது கோயிலுக்குள் இருக்கும் சூட்சும சக்தியை பெறக்கூடிய ஆற்றலை இழந்து விடுகிறார். அசைவ உணவானது சூட்சும சக்தி பெறும் ஆற்றலை குறைத்து விடுகிறது.

இதனால் தான் கோயிலுக்கு செல்லும் போது எளிமையான உணவை உண்டு மனதளவில் உற்சாகத்துடன் இறைவனை தரிசிக்க வேண்டும் என்பார்கள் நம் முன்னோர்கள். ஒருவேளை அசைவ உணவு சாப்பிட்ட பின் கோயிலுக்கு போக கூடிய சூழ்நிலை ஏற்பட்டால் 3 அல்லது 4 மணி நேரத்திற்கு பின்னரே கோயிலுக்கு செல்ல வேண்டும்.



Similar Post You May Like




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Twitter_Right
fb_right
Insta_right
Telegram_Side
mobile_App_right