கோவைக்கு சிறப்பு சேர்க்கும் -- ஹீதயாத்து இஸ்லாம் ரபிஹீய்யா ஜமாத் பள்ளி வாசல்

 Thursday, April 4, 2019  03:11 PM

கோவை மாநகரின் இருதயமாக விளங்கிய கோட்டை மேடு மைசூர் திப்பு சுல்தானின் கோட்டை கொத்தலங்கள் இருந்தமையால் இன்றும் கோட்டை மேடு என்று அழைக்கப்படுகிறது. இந்து முஸ்லீம் மத ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ள இடத்தில் இப்பள்ளி வாசல் உள்ளது. இந்த பள்ளி வாசலை சுற்றிலும் கோயில்கள் சர்ச்சுக்களும் அமைந்துள்ளன. இந்த பள்ளி வாசல் மைசூர் திப்பு சுல்தானால் 1855-ல் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.



ஆரம்பத்தில் வெறும் மட்டைகளால் வேய்ந்த பள்ளி வாசலாக இருந்தது.அப்போது நாற்பது பேர் மட்டுமே தொழ முடியும் இதை ஒரு முஸ்லீம் பெரியவர் பராமரித்து வந்தார் பின்னர் இப்பகுதியில் வாழ்ந்த மர்ஹிம் ஹாஜி முகமது பிள்ளை ராவுத்தரிடமும் அவரிடம் இணைத்து வாணிபம் செய்தவர்களிடமும் இப்பள்ளி வாசலை ஒப்படைதார். அன்று முதல் அப்பள்ளி வாசல் சிறிது சிறிதாக வளர்ந்தது. பின்னர் 1910-ல் வசித்த குடும்பங்கள் ஒருமித்து ஹீதயாத்து இஸ்லாம் ரபிஹீய்யா ஜமாத் என்ற நிறுவனத்தை அமைப்பு முறையோடு செயல்படுத்தி தமிழகத்திலேயே சிறப்பு மிக்க பள்ளி வாசலாக உருவாக்கினார். அக்காலத்தில் சிமெண்ட் இல்லாமையால் மட்டி காரை சுண்ணாம்பு போன்றவற்றை கொண்டே இப்பள்ளி வாசலை கட்டி முடித்தனர். தற்போது இதன் மூலம் ஒரு மேல்நிலைப் பள்ளியும் அரபிக் கல்லூரியும் மகளிர் தையற்பயிற்சி நிலையமும் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது.






Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyal_media_Right1
Noyyalmedia_right2