ஆழியாறு அணை மற்றும் குரங்கு அருவியில் குவிந்தனர் சுற்றுலாப்பயணிகள்

 Tuesday, October 29, 2019  06:36 AM

தீபாவளி கொண்டாட்டம் முடிந்து நேற்றும் விடுமுறை நாளாக இருந்ததால் நேற்று (திங்கட்கிழமை) கோவை மாவட்டம் ஆழியாறு அணை மற்றும் குரங்கு அருவியில் சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.

வால்பாறைக்கு சுற்றுலா செல்வோர் எண்ணிக்கை நேற்று கணிசமாக அதிகரித்தது, ஆழியாறு அணையில் நுழைவு சீட்டு வாங்குவதற்காக நீண்ட வரிசையில் நின்றிருந்தனர், ஆழியார் சோதனை சாவடியில் நுழைவு சீட்டு வாங்க வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றது.

yt_middle

குரங்கு அருவியின் முன்புறம் வாகனங்கள் அதிக அளவில் பார்க்கிங் செய்யப்பட்டதால் சாலையில் மற்ற வாகனங்கள் செல்ல இடையூறாக இருந்தது, பிறகு வனத்துறை காவலர்கள் போக்குவரத்து சரிசெய்தனர்.

நேற்று மட்டும் 8000 பேருக்கு மேல் வருகை தந்துள்ளனர் என வனத்துறையினரின் சார்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது.






Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Twitter_Right
Telegram_Side
Insta_right
mobile_App_right
fb_right