கோவைக்கு சிறப்பு சேர்க்கும் - சூலக்கல் மாரியம்மன் கோவில்

 Wednesday, January 1, 2020  08:30 PM   No Comments

சூலக்கல் மாரியம்மன் கோவில் -கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவுக்கு தென் மேற்கே 8 கி.மீ. தொலைவில் உள்ளது சூலக்கல். இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற சூலக்கல் மாரியம்மன் கோவில் உள்ளது. சூலக்கல் மாரியம்மன் வடக்கு திசை நோக்கி எழுந்தருளியுள்ளதால் ’வடக்கு வாயிற் செல்வி’ எனவும் அழைக்கப்படுகிறாள்.

பொள்ளாச்சியில் இருந்து வடக்கிபாளையம் வழியாகப் பயணித்தால் 11கி.மீ தொலைவில் சூலக்கல் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அன்னை அமர்ந்த நிலையில் வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்ட நிலையில், வலது கைகளில் உடுக்கையும் சுத்தியும்; இடது கைகளில் சூலமும் கபாலமும் ஏந்தி எழில் கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

300 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கூறப்படும் இந்த கோவிலில் அபிஷேகம் ஆராதனை எல்லாம் சுயம்புவிற்கே நடத்தப்படுகிறது. சுயம்பு அருகில் மாரியம்மன் சிலை வடிவில் காட்சியளிக்கிறார். கருவறையில் அம்மன் வலது காலை மடித்து அமர்ந்த நிலையில் வலது கைகளில் உடுக்கையும், கத்தியும், இடது கைகளில் சூலமும், கபாலமும் தாங்கியிருக்கிறாள்.

கோவில் வடக்கு நோக்கி கோயில் அமைந்துள்ளது. பொதுவாக பெண காவல் தெய்வங்கள் வடதிசை நோக்கி இருப்பதை பழங்கால மரபு 'வடக்கு வாயிற் செல்வி' என சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம். அம்மை நோயையும், கண்நோயையும் தீர்ப்பதில் கண்கண்ட தெய்வமாய் திகழ்கிறாள், சூலக்கல் மாரியம்மன். அவளது அபிஷேக தீர்த்தத்தை கண்நோய் கண்டவர்கள் தங்கள் கண்களில் இட்டு குணம் பெறுகின்றனர்.குழந்தைப்பேறு, இல்லாதவர்களின் அம்மனை வேண்டி, தல விருட்சத்தில் தொட்டில் கட்டி பிராரத்தனை செய்தால், அவர்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேறுகிறாம். குழந்தை பிறந்தவுடன் அம்பிக்கு நேர்த்திக் கடன் செலுத்தவும் அவர்கள் தவறுவதில்லை.

கிணத்துக்கடவு அருகேயுள்ள வேலாயுதம் பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் பசுக்களை சூலக்கல் பகுதியில் மேய விடுவார்கள். மேய்ச்சல் முடிந்து மாலையில் பசுக்கள் வீடு திரும்பும் போது நாளுக்கு நாள் அவை சுரக்கும் பாலின் அளவு குறைந்து கொண்டே வந்தன. இதன் மர்மம் என்ன என்பதை ஆராய்வதற்காக விவசாயிகள் பசுக்கள் மேயும் பகுதிக்கு சென்று ஒளிந்திருந்து பார்த்தனர். அப்போது பசுக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஓரிடத்தில் மொத்தமாக பாலை சுரந்து கொண்டிருந்தன.

இதைக்கண்ட விவசாயிகள் அந்த மாடுகளை விரட்ட அவை மிரண்டு ஒடின. அப்போது ஒரு மாட்டின் கால் பால் சுரந்த இடத்தில் மாட்டிக் கொண்டது. மாடு காலை உருவிக்கொண்டு ஓடிய போது அந்த இடத்தில் மண்ணில் புதைந்திருந்த சுயம்பு வெளிப்பட்டு லேசாக சேதமடைந்தது. சுயம்பு கல்லுக்கு அருகில் அம்பிகையின் சூலம் இருப்பதைக்கண்ட விவசாயிகள் அந்த பகுதியை சூலக்கல் என அழைத்தனர். பசுவின் உரிமையாளர் கனவில் தோன்றிய அம்பிகை, சூலக்கல்லில் சுயம்புவாக உருவெடுத்திருப்பதையும், சுயம்புவைச் சுற்றி கோவில் கட்டுமாறும் அருள்வாக்கு கூறினார்.அதன்படி சுயம்பு மூர்த்திக்கு கருவறை மண்டபமும், மகா மண்டபமும் அமைக்கப்பட்டது. சூலக்கல் மாரியம்மன் கோவிலுக்கு கோவை மாவட்டம் மட்டுமல்லாது கேரளாவில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்கிறார்கள். தன்னை நாடி வந்து தரிசிக்கும் பக்தர்களுக்கு அவர்கள் எண்ணியதை எளிதாக நிறைவேற்றித்தருகிறாள் சூலக்கல் மாரியம்மன். அம்மனின் கருணையை கண்கூடாக கண்டதாக கூறுகிறார்கள் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள்.

கோவில் வளாகத்தில் மிகப்பெரிய குதிரை சிலைகள் உள்ளன. இந்த குதிரை சிலைகளை ஒரு பக்தர் தனது வேண்டுதல் நிறைவேறியதற்காக அமைத்துக் கொடுத்ததாக கூறுகிறார்கள். பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவில் இருந்து சூலக்கல் மாரியம்மன் கோவிலுக்கு அடிக்கடி டவுன் பஸ் வசதி உள்ளது. இந்த கோவிலில் எடுக்கப்படும் சினிமாக்கள் வெற்றிப்படமாக அமைந்ததாக கூறுகிறார்கள். தேவர் மகன் சினிமாவுக்கு இங்கு சில காட்சிகள் படமாக்கப்பட்டன.

திருவிழா :

சூலக்கல் மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் கடைசி செவ்வாய்க் கிழமை தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் உள்ள எந்த கோவிலில் திருவிழா நடை பெற்றாலும் அந்த கோவில்களுக்கெல்லாம் இங்கிருந்து தான் தீர்த்தம் எடுத்துச் செல்வார்கள். இந்த தீர்த்தத்தால் அபிஷேகம் செய்த பின்னர் தான் இங்கு திருவிழா தொடங்கும். இந்த ஐதீகம் தலைமுறை தலைமுறையாக பின்பற்றப்பட்டு வருகிறது.

தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறந்திருக்கும்.

கோவிலின் நுழைவு வாயிலில் தீபஸ்தம்பமும், அடுத்து கொடி மரமும் உள்ளது. இவை ஆலயத்துக்கு வரும் பக்தர்களை அன்போடு வரவேற்பது போல உள்ளது. கண் சம்பந்தப்பட்ட நோய்களை விரைவில் தீர்த்து வைப்பது சூலுக்கல் மாரியம்மனின் தனிச்சிறப்பாகும். கண் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஏராளமானோர் கோவிலுக்கு வந்து சன்னதியில் தங்கி காலை, மாலை நேரங்களில் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தண்ணீரை கண்ணில் இட்டுக்கொள்கின்றனர்.

இப்படி செய்தால் பக்தர்களின் கண் நோய் விரைவில் குணமாகிறது என்று கூறுகிறார்கள் பக்தர்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு வந்து அம்மனை வழிபட்டு ஸ்தல விருட்சமான மாவிலங்க மரத்தில் தொட்டில் கட்டி வழிபாடு செய்தால் அவர்கள் வீட்டில் மழலை தவழும் என்பதும் ஐதீகமாக இருந்து வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் சுவாமி அம்மனுக்கு அபிஷேகம் செய்தும் வஸ்திரம் அணிவித்தும் தேர்த்திக்கடனை நிறைவேற்றுகிறார்கள்.Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
web right
Web Right