இயற்கையின் அற்புதம் வால்பாறை அக்காமலை Gross Hills

 Tuesday, January 7, 2020  08:30 PM   No Comments

இயற்கையில் பல்வேறு அற்புதங்களில் ஒன்றான 'கிராஸ் ஹில்ஸ்' போன்ற வனப்பகுதிகளை பாதுகாப்பதே, நமது எதிர்கால சந்ததியினருக்கு நாம் விட்டு செல்லும் சொத்தாகும். இதற்காக, உலக சுற்றுசூழல் தினத்தில் நாம் உறுதிமொழி எடுப்பது அவசியமாகிறது. ஆனைமலை புலிகள் காப்பகம், 958 சதுர கி.மீ.,பரப்பரளவில் அமைந்துள்ளது. வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி, உலாந்தி, உடுமலை, அமராவதிஆகிய, 6 வனச்சரகங்களை உள்ளடங்கியதாகும். மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உலகின் அரியவகையான வனவிலங்குகள், பசுமை மாறாக்காடுகள், எங்கு பார்த்தாலும் தொட்டுவிடும் துாரத்தில் நீர்வீழ்ச்சிகள், பசுமையான தேயிலை தோட்டங்கள் உள்ளன.அனைத்துக்கும் ஆதாரம் வால்பாறையிலிருந்து, 16 கி.மீ, தொலைவில் உள்ள அக்காமலை கிராஸ் ஹில்ஸ். மத்திய அரசால் தேசிய பூங்காவாக இந்தப்பகுதி அறிவிக்கப்பட்டுள்ளது.அமைதியான சூழலில் இயற்கை அனையின் மடியில் தவழும் அக்காமலைகிராஸ் ஹில்ஸ் பகுதியில் இல்லாத வனவிலங்குகளே இல்லை. அதே போல் பாதுகாக்க பட்ட இந்த புல்வெளியை பாதுகாக்கும் வகையில் வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் அக்காமலை கிராஸ்ஹில்ஸ் பகுதிக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர். மனிதர்கள் நடமாட்டம் இல்லாத, அமைதியான இடத்தில் அமைந்துள்ள கிராஸ்ஹில்ஸ் பகுதியில் தான் ஆண்டு தோறும் அதிக அளவில் மழை பெய்கிறது. இது போன்ற வனப்பகுதிகள் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதால் தான் வால்பாறை மலைப்பகுதியில் ஆண்டு தோறும் பருவமழை தவறாமல் பெய்துவருகிறது.மலை முகடுகளுக்கு மத்தியில் இயற்கை அன்னை வரைந்த அற்புதமான ஓவியம் தான் அக்காமலை கிராஸ் ஹில்ஸ். இந்தப்பகுதியில் கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை சினிமா சூட்டிங் எடுத்துள்ளனர்.

கடந்த, 2008 ம் ஆண்டு, வால்பாறை மலைப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து, அக்காமலை கிராஸ்ஹில்ஸ் பகுதியில் காணப்படும் இயற்கை வளங்களையும், அரியவகை வனவிலங்குகளையும் பாதுகாக்கும் வகையில் வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
web right
Web Right