ஸ்பெஷல் மரவள்ளிக் கிழங்கு பொரியல் செய்யலாம் வாங்க....

 Saturday, January 11, 2020  07:30 PM

தேவையானப் பொருள்கள்:

மரவள்ளிக் கிழங்கு_1 (நடுத்தரமானது)
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்_ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய்_ஒரு டீஸ்பூன்


கடுகு
உளுந்து
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:
முதலில் கிழங்கை சிறுசிறு துண்டுகளாக்கி சிறிது உப்பு போட்டு அவிக்கவும். பொரியல் செய்வதற்காகவென்றுத் தனியாக அவிக்க வேண்டுமென்பதில்லை.சமயங்களில் மீதமான அவித்த கிழங்கையும் பயன்படுத்தலாம். பிறகு படத்தில் உள்ளதுபோல் பொடியாக நறுக்கவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து கிழங்கைப் போட்டு ஒரு பிரட்டு பிரட்டி மிளகாய்த் தூள்,மஞ்சள் தூள்,சிறிது உப்பு சேர்த்துக் கிளறி கொஞ்சம் த‌ண்ணீர் விட்டு மூடி போட்டு வேக வை.தீ மிதமாக இருக்கட்டும்.ஏற்கனவே கிழங்கு வெந்து விட்டதால் தண்ணீர் நிறைய ஊற்ற வேண்டாம்.லேசாகத் தெளித்தால் போதும்.எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து கலந்ததும் கிளறி விட்டு,மிளகாய்த்தூள் வாடை இல்லாமல் சிவந்து வந்ததும் இறக்கு.

இது எல்லா வகையான சாதத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம்.






Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyalmedia_right2
Noyyal_media_Right1