பொங்கல் ஸ்பெஷல் ஜவ்வரிசி சேமியா பாயாசம் செய்யலாம் வாங்க....

 Tuesday, January 14, 2020  07:30 PM

சுவையான ஜவ்வரிசி சேமியா பாயாசம், எளிய ஜவ்வரிசி சேமியா பாயாசம், ஜவ்வரிசி சேமியா பாயாசம் செய்யும் முறை, பிரபலமான ஜவ்வரிசி சேமியா பாயாசம், ஜவ்வரிசி சேமியா பாயாசம் செய்முறை, ஜவ்வரிசி சேமியா பாயாசம் சமையல் குறிப்புகள், ஜவ்வரிசி சேமியா பாயாசம் செய்வது எப்படி.

உங்கள் சுவையை தூண்டும் ஜவ்வரிசி சேமியா பாயாசம் சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான ஜவ்வரிசி சேமியா பாயாசம் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

சமைக்க தேவையானவை

ஜவ்வரிசி-கால் கப்
சேமியா-கால் கப்
சர்க்கரை-அரை கப் (உங்களின் இனிப்புக்கேற்ப)
பால்-அரை கப்
ஏலக்காய்-ஒன்று
நெய்-முந்திரி & திராட்சையை வறுக்குமளவு
முந்திரி-5
திராட்சை-5
குங்குமப்பூ-நான்கைந்து இதழ்கள்உணவு செய்முறை : ஜவ்வரிசி சேமியா பாயாசம்

Step 1.

முதலில் வெறும் வாணலை அடுப்பில் ஏற்றி மிதமான தீயில் ஜவ்வரிசியைப் போட்டு தீய்ந்துவிடாமல் வறுக்கவும். வறுக்கும்போதே நமக்குத்தெரியும் ஜவ்வரிசி உருண்டுருண்டு அளவில் கொஞ்சம் பெரிதாகும். வறுபட்டதும் இதைத் தனியாக எடுத்து வைக்கவும்
Step 2.

அது முடிந்ததும் சேமியாவைப் போட்டு சூடுவர வறுத்துக்கொள்ளவும். ஒரு கனமான பாத்திரத்தில் நான்கைந்து கப்புகள் தண்ணீர் ஊற்றி அடுப்பில் ஏற்றி காய்ந்ததும் ஜவ்வரிசியைக் கழுவி சேர்க்கவும். அது நன்றாக‌ வெந்து வரும்போது சேமியாவை சேர்க்கவும். (இரண்டையும் ஒன்றாகச் சேர்த்தால் சேமியா முதலில் வெந்து குழைந்துவிடும்) .
Step 3.

இரண்டும் வெந்ததும் சர்க்கரையைச் சேர்த்து கரைந்ததும், பாலைச் சேர்த்து கிண்டிவிட்டு, தேவையானால் தண்ணீர் சேர்த்து, குங்குமப்பூ, பொடித்த‌ ஏலக்காய் சேர்த்து இறக்கி, நெய்யில் முந்திரி & திராட்சையை வறுத்து சேர்க்கவும்
Step 4.

பாயசத்தைத் தனியாக மட்டுமல்லாமல், உளுந்து வடை அல்லது அப்பளத்துடன் சேர்த்து சாப்பிட ஆஹா என்றிருக்கும் ! சூடாக இருக்கும்போது நீர்த்து இருக்கும், ஆற ஆற இறுகி கெட்டியாகும்.
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyalmedia_right2
Noyyal_media_Right1