அரசி விக்டோரியா காலமும், கோயம்புத்தூரும்...

 Wednesday, January 22, 2020  12:09 PM

கோயம்புத்தூர் நகராட்சி 1866-ல் நிறுவப்பட்டது. இதன் முதல் தலைவராக Robert Stanes பதவியேற்றார். Robert Stanes பல நூற்பாலைகளை நிறுவி கோயம்புத்தூரின் விரைவான தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக விளங்கினார். 1871இல் இந்தியாவில் எடுக்கப்பட்ட முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கோயம்புத்தூரின் மக்கள்தொகை 35,310 ஆக இருந்தது; சென்னை மாகாணத்தின் பத்தாவது பெரிய நகரமாகவும் இருந்தது.

1876-78இன் பெரும் பஞ்சத்திலும் 1891-92ஆம் ஆண்டு வறட்சியிலும் கோயம்புத்தூர் பாதிக்கப்பட்டது. 1900ஆம் ஆண்டு பெப்ரவரி 8ஆம் நாள் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் ஏறத்தாழ 30 பேர் உயிரிழந்தனர்; கோயம்புத்தூர் மத்திய சிறை, கத்தோலிக்க திருச்சபை தேவாலயம் மற்றும் பல கட்டிடங்கள் சேதமுற்றன.

விரைந்த வளர்ச்சி1920களில் கோயம்புத்தூரில் துணித் தயாரிப்பு மிக விரைவான வளர்ச்சியைக் கண்டது. 1930களில் மும்பையில் துணித் தயாரிப்பாலைகள் முடங்கியதும் பகுதியான வளர்ச்சிக்கு அடிகோலிட்டது. 1934இல் கட்டபட்ட மேட்டூர் அணை வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருந்தது.

தொடர் வண்டி, சாலை இணைப்புகள் மேம்படுத்தப்பட்டதால் சரக்குப் போக்குவரத்து எளிதாயிருந்தது. 1911-1921 காலகட்டத்தில் அரசு உதவிய கடன்களுடன் கட்டப்பட்ட 15,000க்கும் மேலான பாசனக் கிணறுகள் பெரும் வறண்ட நிலப்பகுதிகளை வேளாண்மைக்குத் தகுதியாக்கிற்று.

தென்னிந்தியாவில் திரைப்படத்துறை துவங்கிய காலத்தில் கோயம்புத்தூரில் பல படம்பிடி தளங்கள் துவங்கப்பட்டன. 1935இல் இரங்கசாமி நாயுடு சென்ட்ரல் படம்பிடி தளத்தையும் 1945இல் எஸ். எம். சிறீராமுலு நாயுடு பட்சிராசா படம்பிடி தளத்தையும் நிறுவினர்.

1910இல் காளீசுவரா மில்லும் சோமசுந்தா மில்லும் நிறுவப்பட்டன. 1911இல் பெரியநாயக்கன்பாளையத்தில் லட்சுமி ஆலைகள் நிறுவப்பட்டன. 1930களில் பல துணித்தயாரிப்பு மற்றும் நூற்பாலைகள் நிறுவப்பட்டிருந்தன.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyalmedia_right2
Noyyal_media_Right1