நீலகிரி மக்கள் தெய்வமாக வழிபடும் ஜான் சலீவன் - இவர் யார் தெரியுமா?

 Wednesday, January 22, 2020  04:30 PM   No Comments

நீலகிரி மாவட்டத்தை முதன் முறையாக வடிவமைத்தவர் என்ற பெருமை நீலகிரியின் முதல் கலெக்டரான ஜான் சலீவனை சாரும். இவரை இன்றும் நீலகிரி மக்கள் சிலை அமைத்து அவரை தெய்வமாக வழிபாடு வருகின்றனர்.

உதகை நகரை நிர்மானித்தவரும், நீலகிரி மாவட்டத்தின் முதல் ஆட்சியராக இருந்தவருமான ஜான் சலீவன் 1788 ஜூன் 15 ஆம் தேதி லண்டனில் பிறந்தார்.

கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவுக்கு வந்த சமயத்தில் 1817 ஆம் ஆண்டு கோவை ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இவர் கடந்த 1819ம் ஆண்டில் கோவை மாவட்ட கலெக்டராக இருந்த போது, நீலகிரி மலைகளில் ஏறி வந்துள்ளார். கடும் முயற்சியைக் மேற்கொண்டு நீலகிரி மலையைக் கண்டறிந்ததுடன் 1822 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வந்த பழங்குடியினர், தோடர் இன மக்களிடம் நிலத்தை விலைக்கு வாங்கி பங்களா ஒன்றை கட்டினார்.

காடு, மலைகளாக காட்சியளித்த இந்த நீலகிரியிலும் மக்கள் வாழ்வது கண்டறியப்பட்டது. அதன்பின், கோத்தகிரி கன்னேரிமூக்கு பகுதிக்கு வந்த அவர், அங்கு ஒரு பங்களாவை கட்டியுள்ளார். தொடர்ந்து காலபோக்கில் கோத்தகிரி கன்னேரி மூக்கு பகுதியில் கட்டப்பட்ட சலீவன் பங்களா கண்டு கொள்ளாமல் விடப்பட்டது. இந்நிலையில், 2002ம் ஆண்டு அப்போதைய கலெக்டராக இருந்த சுப்ரியா சாஹூ இந்த கட்டிடத்தை புனரமைத்தார்.மேலும் உதகையில் சாலைகள், நீதிமன்றம் , மருத்துவமனை, தபால் நிலையம், வங்கி, சிறைச்சாலை ஆகியவற்றை அமைத்தார். மேலும், பணப் பயிர்களான காபி, தேயிலை, உருளை கிழங்கு, இங்கிலீஷ் காய்கறிகளை அறிமுகப்படுத்தினார்.

கோவை ஆட்சியராக இருந்து ஜான் சலீவன் 1819-ம் ஆண்டு முதன் முறையாக நீலகிரி மாவட்டத்துக்கு வந்தார். இங்கு கடும் குளிரான காலநிலை நிலவியதால், 1825-ம் ஆண்டு ஒரு மருத்துவருடன் பழங்குடியினருக்கான மருத்துவக்குழு ஏற்படுத்தினார். 1826-ம் ஆண்டு அப்போதைய அரசு உடல் நலன் குன்றிய சிப்பாய்களுக்கு தங்குமிடம் அமைக்க உத்தரவிடப்பட்டது.

அதன் பேரில் 1828-ம் ஆண்டு உதகை ராணுவ கன்டோன்மெண்டாக அறிவிக்கப்பட்டு, உதகை ஜெயில் ஹில்லில் பேரக்ஸ் உருவாக்கப்பட்டது. காலபோக்கில் ராணுவ கன்டோன்மெண்ட் கைவிடப்பட்டு, மருத்துவமனை உருவாக்கப் பணிகள் நடந்தன. மக்கள் பங்களிப்புடன் மருத்துவமனை அமைக்க அரசிடம் நிதி கோரப்பட்டது. மருத்துவமனையில் ஆங்கிலேயர்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு தனித்தனியாக வார்டுகள் ஏற்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டது. 1865-ல் ரெவரன் ஹாஜ்சன் என்பரின் நிலம் கண்டறியப்பட்டு, ரூ.21,556 மதிப்பில் மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டது.

இதில், அரசின் பங்கு ரூ.12,000. 1867-ம் ஆண்டு மார்ச் மாதம் புற நோயாளிகள் சேவை தொடங்கப்பட்டது. ஆரம்பக் காலத்தில் இம்மருத்துவமனக்கு கூடுதல் கட்டடங்கள் கட்டுவதற்கு ஹைதராபாத் நிஜாம்கள், மைசூர் மகாராஜா உள்ளிட்டோர் உதவியுள்ளனர். அதன்பின்னர் செஞ்சிலுவைச் சங்கம், அரிமா சங்கம் ஆகியவற்றின் உதவியுடன் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன’

ஊட்டியில் ஸ்டீபன் தேவாலய பின்புறம் ஜான் சலீவனின் மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஊட்டியில் அவரது முயற்சியால் உருவாக்கப்பட்ட பல கட்டடங்கள் இன்றும் கம்பீரமாய் நிற்கின்றன. இவருடைய தீவிர முயற்சியின் காரணமாக வெளிநாட்டில் இருந்து மலை காய்கறிகள் மற்றும் தேயிலை செடிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வரவழைக்கப்பட்டது. ஜான் சலீவன் நினைவகம் அருகே சுற்றுலா வரும் குழந்தைகளின் பொழுது போக்கிற்காக விளையாட்டு பூங்கா அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
Web Right
web right