கோவையின் வேகமான தொழில் வளர்ச்சிக்கு ஆணிவேராக திகழ்ந்த நிகழ்வுகள் - ஒரு வரலாற்றுப் பார்வை

 Wednesday, January 22, 2020  06:30 PM

பிரித்தானியர் கோயம்புத்தூரை ஆண்டபோது இதனை மலபார் கரையிலிருந்தத் துறைமுகங்களுடன் இணைத்தனர். பின்னர் பிரித்தானியர் 1862ஆம் ஆண்டு தொடர்வண்டி இணைப்புகள் ஏற்படுத்தியபோது போத்தனூர் வழியாகக் கொச்சிக்கு இருப்புப் பாதைப் போடப்பட்டது. இது இங்கிலாந்திற்கு கச்சாப்பொருள்களைக் கொண்டுசெல்ல அவர்களுக்கு உதவியது.நங்கூரம் நங்கூரம் நங்கூரம் நங்கூரம் நங்கூரம் நங்கூரம் நங்கூரம்.

1888 ஆம் ஆண்டு, சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் இன்று ஸ்டேன்ஸ் மில் என்று பரவலாக அறியப்படும் கோயம்புத்தூர் நூற்றல் மற்றும் நெய்தல் ஆலையை நகரின் வடக்குப் பகுதியில் துவக்கினார். கூடவே ஓர் குளம்பி சீராக்கப் பட்டறையையும் (coffee curing factory) திருச்சிச் சாலையில் நிறுவினார். இதுவே கோவையில் பெருமளவு நெசவாலைகள் வருவதற்கு அடிக்கோளிட்டது. மேலும் பலர் தங்கள் நிறுவனங்களை நிறுவிட சர் ராபர்ட் மிகவும் உதவி புரிந்தார்.

கோவைக்கு இவராற்றிய இந்தச் சேவைகளுக்காக கைசர்-இ-இந்த் தங்கப்பதக்கத்தையும் பின்னர் 1920ஆம் ஆண்டு 'சர்' பட்டத்தையும் கொடுத்துக் கௌரவிக்கப்பட்டார். 1910ஆம் ஆண்டு காளீசுவரா மில்லும் சோமசுந்தரா மில்லும் நிறுவப்பட்டன. பாப்பநாயக்கன்பாளையத்தில் 1911ஆம் ஆண்டு இலட்சுமி மில் இயங்கத் தொடங்கியது. 1930களில் பைக்காரா மின்னாக்கத் திட்டத்திலிருந்து குறைந்த கட்டணத்தில் மின்சக்தி கிடைத்ததையொட்டி மேலும் பல துணியாலைகள் நிறுவப்பட்டன.

1900ஆம் ஆண்டு சாமிக்கண்ணு வின்சென்ட் என்ற இரயில்வே பொறியாளர் தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக வெரைட்டி ஹால் (தற்போது டிலைட் திரையரங்கம்) என்னும் திரையரங்கத்தைக் கட்டினார் அவரது மகன் பால் வின்சென்ட் பேசும் திரைப்படங்களைத் தென்னிந்தியாவில் அறிமுகம் செய்தார். 1922ஆம் ஆண்டு நாராயணசாமி நாயுடு கரும்பு நசுக்கும் மற்றும் பருத்தி சுத்தப்படுத்தும் பொறிகளை நிறுவினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தண்டாயுதபாணி தொழிற்சாலையை நிறுவினார்.

அதே காலகட்டத்தில் ஜி.டி.நாயுடு அவரது தன்னிகரில்லா பேருந்து சேவையைத் துவக்கினார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மின்னோடிக்கான பெருமையும் அவருக்குடையது. 1931ஆம் ஆண்டு பொள்ளாச்சி நாச்சிமுத்துக் கவுண்டர் துவக்கிய பேருந்து சேவையும் பலதுறைகளில் விரிந்து இன்று பலகோடி ரூபாய் மதிப்புள்ள குழுமமாக வளர்ந்துள்ளது. 1940களில் ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்த டி.பாலசுந்தரம் நாயுடு செஃப்பீல்ட் பல்கலைக்கழகத்தில் படித்து வந்து நெசவுத் தொழில்நுட்பக் கருவிகளைத் தாமே வடிவமைத்துத் தயாரிக்கும் விதமாக டெக்ஸ்டூல் நிறுவனத்தைத் துவக்கினார்.

கோவை 1930களிலும் 1940களிலும் திரைப்படத் தயாரிப்பிலும் முதன்மை பெற்றிருந்தது; இங்கிருந்த சென்ட்ரல் ஸ்டூடியோஸ் மற்றும் பட்சிராஜா ஸ்டூடியோஸ் அரங்குகளில் பல முன்னணி திரைக்கலைஞர்கள் தங்கள் கலைவாழ்வைத் துவங்கியுள்ளனர்.

தொழில்துறை இன்று :

கோவையின் தொழில்வளர்ச்சிக்கு கோவை மாவட்ட சிறுதொழிலதிபர்கள் சங்கம் (Coimbatore District Small Industries Association - CODISSIA) முக்கியப் பங்காற்றி வருகிறது. இச்சங்கத்தின் தொழிற்கண்காட்சிக்கூடம் கொடிசியா வளாகம் பல பன்னாட்டு வணிகக் கண்காட்சிகளை நடத்த வழிவகுத்துக் கோவையின் சிறு தொழிலதிபர்களுக்குப் பன்னாட்டு வணிகம் நடத்த உதவி புரிந்து வருகிறது. இதனை நாட்டின் தூண்கள் இல்லாத மிகப்பெரும் காட்சிக்கூடமாக லிம்கா சாதனைகள் புத்தகம் குறிப்பிடுகிறது.

துணித்துறை

கோவையில் சிறுதும் பெரிதுமாகப் பல துணி தயாரிப்பு ஆலைகள் உள்ளன. இவற்றின் மேம்பாட்டினை வழிநடத்த மத்திய பருத்தி ஆய்வு மையம் மற்றும் தென்னிந்திய துணித்துறை தொழில்முனைவோர் சங்க ஆய்வகம் (SITRA) போன்றவை உள்ளன. அண்மை நகரான திருப்பூர் ஆண்டுக்கு ரூ.50,000 மில்லியன் மதிப்பளவு ஏற்றுமதியுடன் ஆசியாவிலேயே மிகப்பரந்த பின்னலாடை ஏற்றுமதி மையமாகப் விளங்குகிறது.



தகவல் தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் மென்பொருள் ஏற்றுமதியில் சென்னைக்கு அடுத்தபடியாகக் கோவை உள்ளது. கோவையில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா ஒன்று கோவை மருத்துவக் கல்லூரி அருகே அமைக்கப்பட்டுள்ளது. கோவை வணிகச் செயலாக்க அயலாக்கமையமாகவும் வளர்ந்து வருகிறது. உலகளவில் அயலாக்க நகரங்களில் 17ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

கனரக தயாரிப்பு

பூ.சா.கோ. தொழிலகங்கள், சக்தி குழுமம் ஆகியன கோவையின் தயாரிப்புத் தொழில் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின. தற்போது மூடப்பட்டுள்ள சௌத் இந்தியா விசுகோசு வேலை வாய்ப்புகளைக் கூடுதலாக்குவதில் பங்கு வகித்தது. லார்சன் டூப்ரோ நிறுவனத்திற்கு 300 ஏக்கரா பரப்பளவுள்ள வளாகம் கோவையின் அடுத்துள்ள மலுமிச்சம்பட்டியில் உள்ளது. இங்கு அந்நிறுவனம் 2009ஆம் ஆண்டு வார்ப்படம் தயாரிக்கும் அமைப்பை இயக்கத்திற்கு கொண்டு வந்துள்ளது. இலட்சுமி மெசின் வொர்க்ஸ், பிரீமியர் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் (PRICOL),எல்ஜி எக்யுப்மென்ட்ஸ், சாந்தி கியர்ஸ், ரூட்ஸ் ஆகியன இங்கு இயங்கும் மேலும் சில தொழிலகங்கள்.

தானி பாகங்கள்

டெக்ஸ்டூல் இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய அரசின் இராணுவத்திற்கு துப்பாக்கிகளின் முன்வடிவை அளித்திருந்தது. அவர்கள் 1960களில் முதல் உள்நாட்டிலேயே வடிவமைத்த தானுந்தியை தயாரித்தாலும் அப்போது நிலவிய அரசுக் கட்டுப்பாடுகளால் வெளிக்கொணர முடியாது போயிற்று. 1990 வரை பல முன்வரைவுகளை மேம்படுத்தினர். 1972ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக உள்நாட்டுத் தயாரிப்பாகத் தானுந்து தீசல் இயந்திரத்தினை வடிவமைத்தனர். 1982ஆம் ஆண்டு தங்களுக்கான எண்ணிம கட்டுப்பாட்டு இயந்திரங்களையும் லேத்துகளையும் தாங்களே தயாரித்துக் கொண்டனர். அவர்களிடமிருந்து பிரிந்த ஜெயம் ஆட்டோமோடிவ்ஸ் இன்று மகிந்திரா, டாட்டா மோட்டார்ஸ், இந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆகிய தானுந்து தொழிலகங்களுக்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் சேவைகளைக் கொடுத்து வருகிறது.

மாருதி சுசூக்கி மற்றும் டாட்டா மோட்டார்ஸ் கோவையிலிருந்தே அவர்களின் தேவைகளில் 30% தானுந்து பாகங்களைப் பெறுகின்றன. நகரத்தில் பல நகை ஏற்றுமதியில் ஈடுபடும் நகை தயாரிப்பாளர்களும் உள்ளனர். காற்றாலை மின் உற்பத்தியில் பெயர்பெற்ற சுசுலான் நிறுவனம் இங்கு தனது வார்ப்பாலை மற்றும் பட்டறையை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. கூடவே, காற்றாலைகளுக்கான பற்சக்கர மாற்றியைத் தயாரிக்கும் பெல்ஜிய நிறுவனம் ஹான்சென் டிரான்ஸ்மிசன் ரூ.940 கோடி திட்டச் செலவில் தனது தயாரிப்பு வசதியைக் கட்டமைக்கத் திட்டமிட்டுள்ளது.

ஈரமாவு அரவைப்பொறிகள்

கோவை நகரில் 700 ஈரமாவு அரவைப்பொறி தயாரிப்பாளர்கள் மாதமொன்றிற்கு (மார்ச்,2005 படி) 75,000 பொறிகளைத் தயாரித்து வருகின்றனர். 2006ஆம் ஆண்டு கோவையிலும் அடுத்துள்ள ஈரோட்டிலும் தயாராகும் அரவைப்பொறிகளுக்கு கோயம்புத்தூர் ஈரரவைப்பொறி என்ற புவியியல் அடையாளம் வழங்கப்பட்டது. இங்கு அரவைப்பொறி தயாரிப்பாளர்களுக்கான பொது கட்டமைப்பும் உள்ளது.

நீரேற்றிகள் தயாரிப்பு

இந்தியாவில் தயாரிக்கப்படும் 60 சதவீத நீரேற்றிகள் கோவைப் பகுதியிலேயேத் தயாரிக்கப்படுகின்றன. நகரத்தில் ஏராளமான சிறுதொழில் முனைவோர் முனைப்பில் நீரேற்றிகள் தயாரிக்கப்படுகின்றன. ஈரமாவு அரவைப்பொறி தயாரிப்பில் கிட்டத்தட்ட முழுநிறை உரிமை கொண்டுள்ளது. நாட்டின் பிற பகுதிகளைப் போலவே வேளாண்மை மாவட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பொது வணிகம் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் பலரை கவர்கிறது.கோவை நகரின் முதன்மை நீரேற்றி தயாரிப்பாளர்கள் சிலர்: ஷார்ப் தொழிலகங்கள், சிஆர்ஐ பம்ப்ஸ், டெக்ஸ்மோ தொழிலகங்கள், டெக்கன் பம்ப்ஸ், கேஎஸ்பி பம்ப்ஸ்.






Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyal_media_Right1
Noyyalmedia_right2