கோவையின் கலைக் கனவு கூடங்கள்

 Friday, January 24, 2020  04:30 PM

எந்த ஒரு நவீன கண்டு பிடிப்பும் சந்தையில் அறிமுகமானவுடன், பெரும்பாலும் வசதி உள்ளவர்களின் பயன்பாட்டுக்கு உரியதாகதான் அதிக காலம் இருக்கும். ஆனால், சினிமா மட்டும்தான் அறிமுகமான குறுகிய காலத்திலேயே சாதாரண மக்களின் பார்வைக்கு வந்தது. கடந்த, 1905ல், திருச்சியை சேர்ந்த சாமிக்கண்ணு வின்சென்ட் என்பவர் 'எடிசன் சினிமாட்டோகிராப்' என்ற திரைப்பட நிறுவனத்தை துவங்கினார். அவர் பல ஊர்களுக்குச் சென்று, 'இயேசுவின் வாழ்க்கை' என்ற படத்தை திரையிட்டார். நிரந்தரமான திரையரங்குகள் இல்லாத காலத்தில், அவரே அதற்கான உபகரணங்களோடு தமிழகம் முழுதும் சுற்றி படங்களைத் திரையிட்டார்.இவர், 1914ம் ஆண்டு கோவையில், 'வெரைட்டி ஹால்' என்ற (இன்றைய டிலைட் ) திரையரங்கை கட்டி, 'வள்ளி திருமணம்' என்ற படத்தை முதன் முதலில் தயாரித்து வெளியிட்டார். இதுவே தென்னிந்தியாவில் கட்டப்பட்ட நிரந்தரமான முதல் திரையரங்கு.

இவை கலைக்கூடங்களாக மட்டுமில்லாமல், மக்களின் கவலை போக்கி, கனவுகளை வளர்க்கும் கூடமாகவும் பெருகின. ஒரு நுாற்றாண்டு காலம் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று இருந்த சினிமா தியேட்டர்கள் தமிழகத்தில் படிப்படியாக அழிய துவக்கின.தென்னிந்தியாவின் முதல் திரைப்பட நகரமாக விளங்கிய கோவையில் பழமையான திரையரங்குகள், புகழ்பெற்ற ஸ்டூடியோக்கள் எல்லாம் இன்றைக்கு குடோன்களாகவும், கல்யாண மண்டபங்களாகவும் மாறிவிட்டன. இதில், ஒரே ஆறுதல் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கமான டிலைட் தியேட்டர் ஒரு நுாற்றாண்டை கடந்து இன்றும் இயங்கி வருகிறது.

இளைய தலைமுறையினர் இதை அறிந்து கொள்ளும் விதமாக, 'கோவை வாணவராயர் பவுண்டேஷன்' சார்பில், வரலாற்று சிறப்பு மிக்க திரையரங்குகள் மற்றும் ஸ்டூடியோக்களை சுற்றிப்பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது.வரலாற்று ஆய்வாளர் கவியன்பன் பாபு தலைமையில், 50க்கும் மேற்பட்ட கோவை அரசு கலைக்கல்லுாரி மாணவ, மாணவியர் நகர்வலம் புறப்பட்டனர். ரெயன்போ, டிலைட், சாமி, ராயல் போன்ற பழமையான தியேட்டர்கள் மற்றும் பச்சி ராஜா, சென்ட்ரல் போன்ற புகழ் பெற்ற ஸ்டூடியோக்களை நேரில் பார்வையிட்டனர்.கோவையில் சினிமா வளர்ந்த வரலாற்றையும், மக்கள் மத்தியில் தியேட்டர்கள் பெற்று இருந்த செல்வாக்கையும் கவியன்பன் பாபு, மாணவர்களிடம் விளக்கினார்...''அன்றைக்கு, கோவை யில் இருந்த பச்சிராஜா, சென்ட்ரல் ஸ்டூடியாக்களில்தான் பெரும்பாலான சினிமா படங்கள் தயாரிக்கப்பட்டன.

எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, எம்.ஜி.ஆர். என்.எஸ்.கிருஷ்ணன் போன்ற பழம்பெரும் நடிகர்கள் இங்கு தங்கி படங்களில் நடித்தனர்.

அண்ணாத்துரையும், கருணாநிதியும் இங்கு பல படங்களுக்கு கதை வசனம் எழுதினர்.''சேலம் மார்டன் தியேட்டர்ஸ், ஜூபிடர் பிக்சர்ஸ் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்கள் பல படங்களை தயாரித்தன. தமிழகத்தின் முதல் கனவு தொழிற்சாலையாக இருந்த இடங்கள், இன்றைக்கு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டன. எம்.ஜி.ஆர்., படங்கள் ரீலீஸ் ஆகும் போது தியேட்டர் முன்பு, 100 நாட்களுக்கும் அனைத்து காட்சிகளும் திருவிழா கூட்டமாக இருக்கும்,'' என, தன் பழைய சினிமா நினைவுகளை செல்லி சிலிர்க்க வைத்தார் பாபு.கோவையின் கலைக் கனவு கூடங்கள்

yt_middle

எந்த ஒரு நவீன கண்டு பிடிப்பும் சந்தையில் அறிமுகமானவுடன், பெரும்பாலும் வசதி உள்ளவர்களின் பயன்பாட்டுக்கு உரியதாகதான் அதிக காலம் இருக்கும். ஆனால், சினிமா மட்டும்தான் அறிமுகமான குறுகிய காலத்திலேயே சாதாரண மக்களின் பார்வைக்கு வந்தது. கடந்த, 1905ல், திருச்சியை சேர்ந்த சாமிக்கண்ணு வின்சென்ட் என்பவர் 'எடிசன் சினிமாட்டோகிராப்' என்ற திரைப்பட நிறுவனத்தை துவங்கினார். அவர் பல ஊர்களுக்குச் சென்று, 'இயேசுவின் வாழ்க்கை' என்ற படத்தை திரையிட்டார். நிரந்தரமான திரையரங்குகள் இல்லாத காலத்தில், அவரே அதற்கான உபகரணங்களோடு தமிழகம் முழுதும் சுற்றி படங்களைத் திரையிட்டார்.இவர், 1914ம் ஆண்டு கோவையில், 'வெரைட்டி ஹால்' என்ற (இன்றைய டிலைட் ) திரையரங்கை கட்டி, 'வள்ளி திருமணம்' என்ற படத்தை முதன் முதலில் தயாரித்து வெளியிட்டார். இதுவே தென்னிந்தியாவில் கட்டப்பட்ட நிரந்தரமான முதல் திரையரங்கு.

இவை கலைக்கூடங்களாக மட்டுமில்லாமல், மக்களின் கவலை போக்கி, கனவுகளை வளர்க்கும் கூடமாகவும் பெருகின. ஒரு நுாற்றாண்டு காலம் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று இருந்த சினிமா தியேட்டர்கள் தமிழகத்தில் படிப்படியாக அழிய துவக்கின.தென்னிந்தியாவின் முதல் திரைப்பட நகரமாக விளங்கிய கோவையில் பழமையான திரையரங்குகள், புகழ்பெற்ற ஸ்டூடியோக்கள் எல்லாம் இன்றைக்கு குடோன்களாகவும், கல்யாண மண்டபங்களாகவும் மாறிவிட்டன. இதில், ஒரே ஆறுதல் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கமான டிலைட் தியேட்டர் ஒரு நுாற்றாண்டை கடந்து இன்றும் இயங்கி வருகிறது.

இளைய தலைமுறையினர் இதை அறிந்து கொள்ளும் விதமாக, 'கோவை வாணவராயர் பவுண்டேஷன்' சார்பில், வரலாற்று சிறப்பு மிக்க திரையரங்குகள் மற்றும் ஸ்டூடியோக்களை சுற்றிப்பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது.வரலாற்று ஆய்வாளர் கவியன்பன் பாபு தலைமையில், 50க்கும் மேற்பட்ட கோவை அரசு கலைக்கல்லுாரி மாணவ, மாணவியர் நகர்வலம் புறப்பட்டனர். ரெயன்போ, டிலைட், சாமி, ராயல் போன்ற பழமையான தியேட்டர்கள் மற்றும் பச்சி ராஜா, சென்ட்ரல் போன்ற புகழ் பெற்ற ஸ்டூடியோக்களை நேரில் பார்வையிட்டனர்.கோவையில் சினிமா வளர்ந்த வரலாற்றையும், மக்கள் மத்தியில் தியேட்டர்கள் பெற்று இருந்த செல்வாக்கையும் கவியன்பன் பாபு, மாணவர்களிடம் விளக்கினார்...''அன்றைக்கு, கோவை யில் இருந்த பச்சிராஜா, சென்ட்ரல் ஸ்டூடியாக்களில்தான் பெரும்பாலான சினிமா படங்கள் தயாரிக்கப்பட்டன.

எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, எம்.ஜி.ஆர். என்.எஸ்.கிருஷ்ணன் போன்ற பழம்பெரும் நடிகர்கள் இங்கு தங்கி படங்களில் நடித்தனர்.

அண்ணாத்துரையும், கருணாநிதியும் இங்கு பல படங்களுக்கு கதை வசனம் எழுதினர்.''சேலம் மார்டன் தியேட்டர்ஸ், ஜூபிடர் பிக்சர்ஸ் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்கள் பல படங்களை தயாரித்தன. தமிழகத்தின் முதல் கனவு தொழிற்சாலையாக இருந்த இடங்கள், இன்றைக்கு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டன. எம்.ஜி.ஆர்., படங்கள் ரீலீஸ் ஆகும் போது தியேட்டர் முன்பு, 100 நாட்களுக்கும் அனைத்து காட்சிகளும் திருவிழா கூட்டமாக இருக்கும்,'' என, தன் பழைய சினிமா நினைவுகளை செல்லி சிலிர்க்க வைத்தார் பாபு.

yt_customPlease login/signup then give your valuable answers

Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Telegram_Side
fb_right
Insta_right
Twitter_Right
mobile_App_right