நேற்று இரவு வண்ண விளக்குகளால் ஜொலித்த கோவை மாநகரம்

 updatenews360  Thursday, November 25, 2021  06:15 AM   No Comments

கோவை தினத்தை முன்னிட்டு உக்கடம் பெரியகுளம் பகுதியில் வண்ணவிளக்குகள், பாடல்கள் ஓளிபரப்பபட்டு கொண்டாடப்பட்டது.கோயமுத்தூர் மாவட்டம் 1804 ம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி ஆங்கிலேயர்களின் நிர்வாக வசதிக்காக உருவாக்கப்பட்டது. மாவட்டம் உருவாக்கப்பட்ட தினம் கோவை தினமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இன்று 217 வது கோவை தினம் அனுசரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கோவை பெரியகுளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ” ஐ லவ் கோவை” என்ற வாசகம் வைக்கப்பட்டுள்ள இடத்தில் வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேலும் பாடல்களும் ஓளிபரப்பபட்டு கோவை தினம் கொண்டாடப்பட்டது. மாலை வேளையில் பெரிய குளம் பூங்காவிற்கு வந்த பொது மக்கள் இவற்றை ரசித்தனர்.Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel