கண் பார்வையை மேம்படுத்த என்னென்ன சாப்பிடலாம் ..?

 Wednesday, February 5, 2020  05:01 PM

கண் பார்வையை அதிகரிக்க கேரட் சாப்பிடுவது நல்லது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அதைத் தவிர்த்து கண்களைப் பாதுகாக்க மற்ற உணவுகளும் உள்ளன.

அவை என்னென்ன?

பசலைக் கீரை, புரோக்கலி, முட்டைக்கோஸ், லெட்டியுஸ் போன்ற கீரை வகைகளில் ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைய இருப்பதால் அவற்றை உட்கொள்வது கண்களுக்கு மிகவும் நல்லது.

கண் பார்வை சிறப்பாக இருப்பதற்கு முட்டைகளைச் சாப்பிடுவதும் நல்லது.



முட்டையிலுள்ள மஞ்சள் கரு, விழிப்புள்ளிச் சிதைவு ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கிறது.

ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.

அது, விழிப் படல நோய் வருவதற்கான அபாயத்தைக் குறைக்கவல்லது.

வைட்டமின் E சத்துகளைக் கொண்ட பாதாம் பருப்புகளைச் சாப்பிடுவதும் கண்களுக்கு நல்லது.








Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyal_media_Right1
Noyyalmedia_right2