நூறு வயது வாழ.. செய்ய வேண்டியது..


Source: dinamani
 Friday, February 7, 2020  12:05 PM

நாம் நீண்ட காலம் வாழ்வதற்கு முதன்மையாகச் செய்ய வேண்டியது உடல் ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பது தான். எவ்வாறு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் நீண்ட ஆயுளைப் பெற முடியும் என்பது குறித்து இங்கு காண்போம்.

இயற்கை பானங்கள்

கோதுமை புல் பானம், இஞ்சி பானம் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர், இளநீர் போன்ற பானங்களில் ஏராளமான சத்துகள் உள்ளன. இவற்றை அருந்தி வந்தால் உடல் ஆரோக்கியத்துடன், புத்துணர்ச்சியும் பெறும்.

மூளை சலவை

நரம்பு சம்பந்தமான நோய்களும், நமது உடலில் உள்ள செல்களில் தேங்கியுள்ள கழிவுப் பொருட்களால்தான் உண்டாகின்றன. எனவே, மூளையை ஆரோக்கியமாக வைத்திருப்பது அவசியம். அதற்கு ஆழ்ந்த தூக்கம் போதுமானது. இதன்மூலம், மூளை புத்துணர்ச்சி பெற்று உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். நல்ல தூக்கம் நீண்ட ஆயுளைக் கொடுக்கும்.

விளையாடுதல்

விளையாடும் போது நமது உடலில் நோயெதிர்ப்பு மண்டலம் தூண்டப்படும். இதற்கு காரணம் காற்றில் உள்ள பாக்டீரியா, வைரஸ் மற்றும் நுண்ணுயிர் கிருமிகள் உடலை தாக்கும்போது தானாகவே நமது நோயெதிர்ப்பு மண்டலம் போரிட தொடங்கிவிடும். மேலும், நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என்பதால் இயற்கையோடு அதிக நேரம் செலவிட்டால் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ முடியும்.

புல்வெளியில் நடத்தல்

yt_middle

வெறும் காலில் புல்வெளியில் அல்லது வெளியில் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதனால் பாதங்களுக்குத் தேவையான அழுத்தம் கிடைக்கும். இது மன அழுத்தத்தை குறைக்கும். இதனால், நிம்மதியான உறக்கத்தைப் பெற முடியும். எனவே, வெறும் காலில் புல்வெளியில் நடந்தால் நமது ஆயுள் நீளும்.

பாசிகள்

பூமியிலேயே மிகச் சிறந்த உணவு பாசிகள் தான். இவற்றில் 40க்கும் மேற்பட்ட விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. மேலும், பாசிகளில் அமினோ அமிலங்கள், ஆண்டி ஆக்ஸிடண்ட்கள், குளோரோபைல் போன்றவையும் உள்ளன. எனவே இவை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது என்பதால், நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ இவை வழி வகுக்கும்.

குட்டி தூக்கம்

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த, 18 முதல் 26 நிமிடங்கள் வரையிலான குட்டி தூக்கம் அவசியம். இதன்மூலம், மூளை சுறுசுறுப்பாகி, சிந்தனை செயல்பாட்டை அதிகரிக்கும். மேலும், இது உற்சாகமாக பணிபுரியத் தூண்டும்.

எலுமிச்சை நீர்

உணவு உட்கொள்ளும் முன்னர் ஒரு தம்ளர் வெதுவெதுப்பான நீரில், எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் கல்லீரலில் ஏற்படும் தொற்று அழற்சி குறைந்து உடல் ஆரோக்கியம் பெறும்.

இவற்றைக் கடைப்பிடித்தால் நூறு வயது வரை ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


fb_right
mobile_App_right
Twitter_Right
Telegram_Side
Insta_right