இன்றைய தினம் - பிப்ரவரி 9

 Sunday, February 9, 2020  07:33 AM

1895 – வில்லியம் மோர்கன் கைப்பந்தாட்டத்தைக் கண்டுபிடித்தார்

1640 – இலங்கையின் நீர்கொழும்பு நகரை ஒல்லாந்தர் கைப்பற்றினர்

1900 – இலங்கையிலும், இந்தியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது

1900 – டேவிசுக் கோப்பை டென்னிசு போட்டி ஆரம்பிக்கப்பட்டது.

1913 – எரிவெள்ளிக் கூட்டம் ஒன்று வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்கப் பகுதிகளில் தென்பட்டது. இது பூமியின் சிறிய, குறுகிய வாழ்வுக் காலமுள்ள ஒரு இயற்கைத் துணைக்கோள் என வானியலாளர்களால் கூறப்பட்டது.

1920 – ஆர்க்ட்டிக் தீவுக்கூட்டமான சுவல்பார்டு மீது நோர்வேயின் உரிமை அங்கீகரிக்கப்பட்டது.

1942 – இரண்டாம் உலகப் போர்: ஆண்டு முழுவதுமான பகலொளி சேமிப்பு நேரம் போர்க்கால நடவடிக்கையாக ஐக்கிய அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

1959 – முதலாவது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஆர்-7 சோவியத் ஒன்றியத்தில் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.

1965 – வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்கத் தாக்குதல் படைப்பிரிவு முதற்தடவையாக தென் வியட்நாமிற்கு அனுப்பப்பட்டது


yt_custom
1971 – அமெரிக்காவின் லாசு ஏஞ்சலசில் 6.5–6.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 64 பேர் உயிரிழந்தனர்.

1971 – அப்பல்லோ திட்டம்: சந்திரனில் தரையிறங்கிய மூன்றாவது விண்கலம் அப்பல்லோ 14 மூன்று அமெரிக்கர்களுடன் வெற்றிகரமாக பூமி திரும்பியது.

1975 – சோயூஸ் 17 விண்கலம் பூமி திரும்பியது.

1986 – ஏலியின் வால்வெள்ளி சூரியனுக்கு அண்மையில் எட்டரைக் கோடி கிமீ தூரத்தில் வந்தது.

1996 – கோப்பர்நீசியம் தனிமம் முதற்தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

2018 – தென் கொரியாவில் 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாயின.

1919 – மதுரை சோமு, தமிழகக் கருநாடக இசைப் பாடகர் (இ. 1989) பிறந்த தினம்

1984 – தஞ்சாவூர் பாலசரஸ்வதி, தமிழக பரதநாட்டியக் கலைஞர் (பி. 1918) நினைவு தினம்

1996 – சிட்டி பாபு, தென்னிந்திய வீணைக் கலைஞர் (பி. 1936) நினைவு தினம்yt_middlePlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Twitter_Right
Telegram_Side
Insta_right
fb_right
mobile_App_right