கிணத்துக்கடவு பேருந்து நிலையத்திற்குள் வராமல் மேம்பாலத்தில் மீது செல்லும் பேருந்துகளால் பயணிகள் அவதி

 Monday, February 10, 2020  10:14 AM

கிணத்துக்கடவு பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வராமல் மேம்பாலம் மீதே செல்வதால் பேருந்திற்காக காத்து நிற்கும் பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர். இதனால் போக்குவரத்து அதிகாரிகள் இதற்கு நிரந்தர தீர்வு அளிக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி, ஆச்சிபட்டி முதல் ஈச்சனாரி வரை சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகிறது. கிணத்துக்கடவு பகுதியில் பணிகள் முடிவுற்று பேருந்து நிலையம் முன்பு உயர்மட்ட மேம்மபலம் கட்டப்பட்டுள்ளது. இங்கு அனைத்து பேருந்துகளும் மேம்பாலம் கீழே சென்று பேருந்து நிலையத்திற்குள் வரவேண்டும், மேம்பாலம் மீது செல்லக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் பெரும்பாலான நேரங்களில் பல பேருந்துகள் மேம்பாலம் மீது செல்வதால் கீழே பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் அவதிக்கு உள்ளாகின்றனர்.பொள்ளாச்சியில் இருந்த்து வரும் பேருந்துகள் மற்ற பேருந்துகளுடன் போட்டி போட்டுகொண்டு வேகமாக வருவதால் கீழே சேவை சாலையில் வராமல் மேம்பாலம் மீது செல்கிறது, சில சமயங்களில் பேருந்தில் இருக்கும் பயணிகளை மேம்பாலம் தாண்டி இறக்கிவிடுவதாக குற்றசாட்டுகள் வருகிறது.

கடந்த மாதங்களில் பலதடவை பொதுமக்கள் மேம்பாலம் மீது சென்ற பேருந்துகளை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர், பிறகு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறி பொதுமக்களை சமாதானப்படுத்தினர். ஆனால் மீண்டும் சில பேருந்துகள் மேம்பாலம் மீது செல்வதால் பொதுமக்கள் பேருந்துக்காக பலமணிநேரம் காத்து நிற்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சனைக்கு விரைவில் நிரந்தர தீர்வுகண்டு, பேருந்துகள் சர்வீஸ் சாலைவழியாக கீழே வருமாறு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyal_media_Right1
Noyyalmedia_right2