வால்பாறை சிறந்த சுற்றுலா தளமாக மாறுமா? அதிகாரிகள் ஆய்வு

 Thursday, February 13, 2020  02:51 PM

கோவை மாவட்டம், வால்பாறை பகுதிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். கோவையில் உள்ள மக்கள் மலை வாசஸ்தலம் செல்ல வேண்டும் என்றால் ஊட்டிக்கு அடுத்து வால்பாறைக்கே சென்றுவருகின்றனர். சமீப காலமாக சுற்றுலாப்பயணிகளிடம் வரவேற்பும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் வால்பாறையை சிறந்த சுற்றுலா தளமாக மாற்றும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளது. இதன் காரணமாக
வால்பாறையில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள அதிகாரிகள் வால்பாறையில் ஆய்வினை நடத்தியுள்ளனர்.



சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ஒருங்கிணைந்த சுற்றுலா வளா்ச்சிப் பணிக்காக கோவை மாவட்டத்தில் மருதமலை,பேரூா், ஆனைமலை, ஆழியாறு, வால்பாறை உள்ளிட்ட 5 இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தளங்களில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மேற்கொண்டு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த சுற்றுலாத் துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி, வால்பாறை பகுதியில் உள்ள நல்லமுடி காட்சி முனை, கூழாங்கல் ஆறு, சோலையாறு அணை, நீராறு அணை உள்ளிட்ட பகுதிகளை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.






Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyalmedia_right2
Noyyal_media_Right1