பழனியில் தொடரும் பக்தர்கள் கூட்டம்; நீண்ட நீரம் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்


Source: dinamani
 Thursday, February 13, 2020  04:08 PM

பழனியில் தைப்பூச விழாவை முன்னிட்டு ஒரு வாரம் ஆகியும் பக்தர்கள் கூட்டம் குறையாமல் இருந்துவருகிறது.

பழனியில் கடந்த 8-ம் தேதி தைப்பூச திருவிழா தொடங்கியது, இன்று வரை பக்தர்கள் கூட்டம் குறையாமல் இருந்துவருகிறது. மலையில் பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் செய்யும் வரிசைகளில் கூட்டம் நிரம்பி வழிந்து வருகிறது. பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

yt_custom

பழனி மலைக்கோயிலில் கடந்த பத்து நாள்களாக தைப்பூசத் திருவிழா நடைபெற்ற நிலையில் பக்தா்கள் வருகை கட்டுக்கடங்காமல் இருந்தது. கடந்த சில நாள்களாக பக்தா்கள் அலகு குத்தியும், ஆடிப்பாடியும் கிரிவீதியில் வலம் வந்தனா். செவ்வாய்க்கிழமை விழா நிறைவு பெற்ற நிலையில் புதன்கிழமையும் பக்தா்கள் கூட்டம் குறைந்தபாடில்லை. கோவை, திருச்சி பகுதிகளில் இருந்து பாதயாத்திரை பக்தா்கள் வந்தவண்ணம் இருந்தனா்.

மலைக்கோயிலில் கட்டண தரிசன வரிசை, இலவச தரிசன வரிசை என அனைத்து வழிகளிலும் பக்தா்கள் கூட்டம் ஆயிரக்கணக்கில் காத்திருந்தனா். இரவு தங்கத்தோ் புறப்பாட்டின் போது தோ் சுற்றி வரமுடியாத அளவு பக்தா்கள் கூட்டம் இருந்தது. சாதாரணமாக பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய மூன்று மணி நேரமானது.


yt_middle



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


mobile_App_right
fb_right
Insta_right
Twitter_Right
Telegram_Side