வருகிறது வெயில் காலம்... கேரளாவில் காட்டு தீ அபாயம்

 Tuesday, February 18, 2020  12:10 PM

கடந்த 2 மாதங்களாக நிலவிவந்த குளிர்காலம் தற்போது மெதுமெதுவாக குறைந்து வெயில்காலம் துவங்கியுள்ளது இதனால் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டு கேரளாவில் தற்போது கால நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கோடை காலம் போல மாநிலத்தில் பல பகுதிகளில் வெயில் சுட்டெரிக்கிறது.

yt_middle

இந்த வெயில் காரணமாக பகல் நேரங்களில் வெளியில் செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக ஆலப்புழா, கோட்டயம், திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர், பத்தனம்திட்டா ஆகிய 6 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது.

கடும் வெயில் காரணமாக கேரளாவில் உள்ள வனப்பகுதிகளில் மரங்கள் காய்ந்து வருகின்றன. மேலும் வனப்பகுதிகளில் பல இடங்களில் காட்டுத்தீயும் பரவி வருகிறது. நெடுமாங்காடு, கருங்குளம், காட்டுக்குளம் உள்பட பல இடங்களில் ஆதிவாசி மக்கள் வசிக்கும் வனப்பகுதியில் காட்டுத்தீ பரவி வருகிறது. இதனால் அங்குள்ள மலை கிராமங்களில் வசிக்கும் ஆதிவாசி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


yt_custom



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Twitter_Right
fb_right
mobile_App_right
Insta_right
Telegram_Side