கோவையில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு; பணிகள் மும்முரம்

 Tuesday, February 18, 2020  04:47 PM

கோவையில் வரும் 23-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளதை முன்னிட்டு போத்தனூர் செட்டிபாளையம் அருகே எல்&டி பைபாஸ் சாலையை ஒட்டி சுமார் 10 ஆயிரம் பேர் அமர்ந்து ஜல்லிக்கட்டு விளையாட்டை பார்க்கும் விதமாக பிரம்மாண்ட கேலரி அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.


yt_custom
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி கோவையில் கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பாக நடத்தப்பட்டது, இதனை தொடர்ந்து இந்தாண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டி வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு கேலரி அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

சுமார் 500 மாடுகள் பங்கேற்கும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க 12 படிகளுடன் கூடிய 10 ஆயிரம் பேர் அமரும் பிரமாண்ட கேலரி. ஆம்புலன்ஸ் நிறுத்த இடங்கள், தற்காலிக மருத்துவமனைகள், கால் நடை மருத்துவமனை மற்றும் மாடுகளை நிறுத்தவற்கான இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.


yt_middle



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Twitter_Right
mobile_App_right
Insta_right
fb_right
Telegram_Side