கோவையில் மனநிம்மதிக்காக பிச்சை எடுக்கும் வெளிநாட்டு தொழிலதிபர்...


Source: Photo Source ; updatenews360
 Wednesday, February 19, 2020  09:35 AM

கோவை ரயில்நிலையம் அருகே மனநிம்மதிக்காக சுவீடன் நாட்டு தொழிலதிபர் ஒருவர் பிச்சையெடுத்து வருகிறார்.


yt_custom
ஸ்வீடன் நாட்டில் வசிக்கும் கிம் என்ற தொழிலதிபர் மன நிம்மதி இல்லை என சமீபத்தில் ஈஷா யோகா மையத்திற்கு வந்தார், அங்கு தியானம் பயிற்சியினை மேற்கொண்டார், பிறகு ஏழை எளியவர்களுக்கு உணவளித்தார். அதன் பிறகும் நிம்மதி இல்லை என தவித்த கிம் தற்போது ரயில் நிலையம் அருகே பொதுமக்களிடம் இரு கைகளையும் கூப்பி வணக்கம் வைத்து அவர்களிடம் யாசகம் கேட்டு பெற்று வருகிறார்.

மக்கள் கொடுக்கும் சிறு காசுகளை வாங்கி உணவு உண்டு வருகிறார், இதன் மூலம் மன நிம்மதி கிடைப்பதாக கிம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


yt_middle



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Insta_right
fb_right
Telegram_Side
Twitter_Right
mobile_App_right