வெள்ளிங்கிரி மலையில் சிவராத்திரி விழா; பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்முரம்

 Wednesday, February 19, 2020  10:06 AM

வரும் 21-ம் தேதி மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுவதை அடுத்து கோவை பூண்டி அருகே உள்ள வெள்ளிங்கிரி மலையில் பக்தர்களின் வருகைக்காக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய ஆட்சியர் உத்தரவிட்டதை தொடர்ந்து பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.


yt_custom
கோவை மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பூண்டி அருகே உள்ள பிரசித்தி பெற்ற வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், தமிழ் வருடப்பிறப்பு, சித்ரா பௌர்ணமி ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாக்களுக்கு அதிக அளவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவர். இதனையொட்டி போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய கோவை மாவட்ட ஆட்சியர் திரு.கு,.ராசாமணி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

கோவில் வளாகத்தில் போதிய அவசர மருத்துவ உதவி மையம் அமைக்கவும், பிளாஸ்டிக் மற்றும் எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்வதை தவிர்க்கவும் ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுளள்து.


yt_middle



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


mobile_App_right
fb_right
Twitter_Right
Telegram_Side
Insta_right