கிணத்துக்கடவு அருகே சாலையில் கொட்டிய ஜல்லி கற்களால் விபத்தில் சிக்கிய கார்; 2 பேர் பரிதாப சாவு

 Wednesday, February 19, 2020  01:44 PM

கிணத்துக்கடவு அருகே முன்னாள் சென்ற லாரியில் இருந்து ஜல்லி கற்கள் கொட்டி சாலையில் கிடந்ததால் அதில் வழுக்கி கார் கவிழ்ந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.


yt_middle
தனியார் தொலைக்காட்சி நிருபராக பணியாற்றிவரும் சந்திரசேகர் என்பவர் கோவை, மலுமிச்சம்பட்டியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார், பொள்ளாச்சி சாலை கல்லாங்காட்டுபுதூர் அருகே சென்றபோது, ரோட்டில் ஜல்லிகற்கள் சிதறி கிடந்ததால், கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி ரோட்டோரத்தில் உள்ள தடுப்பு கம்பி மீது பயங்கரமாக மோதி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சந்திரசேகர் மற்றும் அவரது நண்பர் கிஷோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இந்த விபத்திற்கு காரணம் சற்று நேரத்திற்கு முன்பு முன்னாள் சென்ற லாரியில் இருந்து ஜல்லிக்கற்கள் சிதறி சாலையில் விழுந்துள்ளது. இதனாலேயே கார் கட்டுப்பாட்டை இழந்தது என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.


yt_custom



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Insta_right
Telegram_Side
fb_right
Twitter_Right
mobile_App_right