இனி பஸ்ஸில் முன்னால் உட்காரும் பெண்கள் டிரைவரிடம் பேச தடை

 Wednesday, February 19, 2020  02:06 PM

அரசு பஸ்களில் பகல் நேரங்களில் டிரைவர்கள் என்ஜின் பேனட் மீது உட்காந்திருக்கும் பெண்களிடம் பேசிக்கொண்டே செல்வதால் விபத்துக்கள் ஏற்படுவதால் டிரைவர்கள் பெண்களிடம் பேசக்கூடாது என போக்குவரத்து கழகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோவை மண்டலத்துக்குட்பட்ட மாவட்டங்களில் பணியாற்றும் அரசு பஸ் டிரைவர்கள் முன் இருக்கையில் அமரும் பெண்களிடம் பேசக்கூடாது. மேலும் பேனட்டில் பெண்களை அமர வைக்கக்கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவையடுத்து அரசு பஸ் டிரைவர்கள் தற்போது பெண்களை பேனட்டில் அமர அனுமதிப்பது இல்லை. மேலும் முன் இருக்கையில் அமரும் பெண்களிடம் பேசுவதும் இல்லை.

yt_custom

இந்த உத்தரவின் மூலம் கவனக்குறைவு முற்றிலும் தவிர்க்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.



yt_middle



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Twitter_Right
Insta_right
Telegram_Side
mobile_App_right
fb_right