வால்பாறையில் சுரங்கப்பாதைக்குள் ஒரு கால்வாய் - ஒரு சிறப்பு பார்வை

 Wednesday, March 11, 2020  03:41 PM  1 Comments

முக்கியமாக நடுவாறு, சோலையாறு என்ற இரண்டு ஆறுகள் உள்ளன. அதில் சோலையார் அணை நிரம்பியதும், அது பரம்பிக்குளத்திற்கு வருகிறது. எஸ்டேட்டுகளுக்கு 30 சதவீதம் போக மீதி நிலங்களை எல்லாம் காடுகளுக்கே விட வேண்டும் என்பது பிரிட்டீஷார் பாலிஸியாகவே இருந்தது.

இயற்கைக்கு எதிராக மனிதத் தேவைக்கு நீராதாரங்கள், மின்சாரம் போன்ற கட்டுமானங்களை உருவாக்குவது எல்லாம் காட்டு விலங்குகளுக்கும், அவற்றின் நாடியாக விளங்கும் காடுகளுக்கும் சேதமில்லாமல், இயல்பு மாறாமலே ஏற்படுத்த வேண்டும் என்பது கூட அவர்களின் திட்ட வரையாக இருந்தது. ஆனால் அதையெல்லாம் மீறியே கட்டுமானங்கள் பல உருவாக்கப்பட்டுள்ளன. கோவை காடுகளைப் போல அல்லாவிட்டாலும், நீலகிரி காடுகளைப் போல கான்கிரீட் காடுகளாக மாறாவிட்டாலும், மனிதத்தேவைக்கான மின்சாரம், நீர்த்தேவை, பாசனத்திட்டங்கள் இங்குள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், காடாம்பாறை, சோலையாறு அணைகள் மூலமாகவே உருவாக்கப்பட்டள்ளது. அதிலும் ஆசியாவிலேயே பெரிய திட்டமான பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டத்தின் காண்டூர் கால்வாய் எல்லாம் மலைகளை குடைந்தே அமைக்கப்பட்டிருக்கிறது.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை வளப்படுத்தும் இந்த திட்டம் கிட்டத்தட்ட 4 லட்சம் ஏக்கருக்கு பயனாவதாக கோடிட்டுக் காட்டப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வாய்க்காலின் நீளம் மட்டும் சுமார் 49.3 கிலோ மீட்டர் ஆகும். வால்பாறை மலைப்பிரதேசத்தில் கேரள எல்லை்பகுதியில் அமைந்துள்ள நீராறு அணையிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோலையாறு அணைக்கு நீர் வந்து அங்கிருந்து 46 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பரம்பிக்குளம் அணைக்கு வருகிறது.

அதன் பிறகு அதே நீர் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தூணக்கடவு வந்து, அங்கிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் ஆழியாறு அணை வந்து சேருகிறது. அங்கிருந்து திருமூர்த்தி அணைக்கு சுரங்க வழியில் செல்கிறது. ஆழியாறு அணைக்கும், திருமூர்த்தி அணைக்கும் இடைப்பட்ட தூரம் 29 கிலோமீட்டர் ஆகும். இந்த நீர்ப்பாதையின் மொத்த தூரமான 120 கிலோமீட்டரில் கேரளப் பகுதிகளை கழித்தது போக 49 கிலோமீட்டர் தூரம் வாய்க்கால்கள் மூலமும், மலைகளை குடைந்தெடுத்த சுரங்கப்பாதைக் கால்வாய்கள் மூலமும்தான் (16 அடி விட்டம் உள்ளவை) நீர் பயணம் செய்கிறது.

yt_middle

இதன் பிறகே ஒப்பந்தப்படி கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாசனப் பரப்புகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இந்த மெகா பிராஜக்ட் நிறைவேற்றப்பட்ட ஆண்டு 1963. பரம்பிக்குளம் அருகே உள்ள சர்க்கார்பதி நீர்மின் நிலையத்தில் ஆண்டொன்றுக்கு 22 டிஎம்சி நீர் திறந்து விடப்பட்டால் குறைந்தபட்சம் 19 டிஎம்சி நீர் திருமூர்த்தி அணைக்கு சென்று சேர்கிறது.

இந்த நீர்ப் பங்கீடு சுழற்சி முறை நடப்பதெல்லாம் வால்பாறை காடுகள்தான் என்கிற போது இதன் கட்டுமானப் பணிகளுக்காக இங்கே எத்தனை இயந்திரங்கள், எத்தனை தொழிலாளர்கள் பணியாற்றியிருப்பார்கள். இதன் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருப்பார்கள். இந்த மனிதத் தேவையின் மூலம் எந்த அளவுக்கு சூழலியல் மாற்றமும், கானுயிர்களின் நிலை தடுமாற்றமும் ஏற்பட்டிருக்கும்?

அதையும் தாண்டி எஸ்டேட்டுகள். உருவாகும் எஸ்டேட்டுகள் எல்லாம் தன் நிலப்பகுதியை 30 சதவீதம் மட்டுமே தேயிலை, காப்பி பயிரிடுவதற்கு வைத்துக்கொண்டு அதன் அருகாமை காடுகளை 70 சதவீதம் காடுகளாகவே வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் வன விலங்குகளுக்கான இயற்கை சூழல், சமநிலை பாதுகாக்கப்படும் என்பது ஆங்கிலேயர் விதித்த விதிமுறை. அதை எடுத்த எடுப்பிலேயே அத்துமீறினார்கள் எஸ்டேட்காரர்கள். எப்படி?

-- கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

User Comments...


D Krishnankumar D Krishnankumar commented on 3 week(s) ago
காமராஜர் ஆட்சி காலத்தில் உருவாக்கி திட்டம் இது.
Subscribe to our Youtube Channel


mobile_App_right
Insta_right
fb_right
Twitter_Right
Telegram_Side