கழுத்து வலியும், அதற்கான தீர்வும்

 Saturday, March 14, 2020  11:29 AM

கழுத்து வலியை சாதாரண வலி என்று நினைத்து விட்டாலோ அல்லது வெறும் வலி நிவாரணிகள் எடுத்தாலோ நிச்சயம் கழுத்து வலி தொடர் கதையாகிவிடும்.

மனித உடலானது பல கோடி நரம்புகளாலும், தசைகளாலும், எலும்புகளாலும் பின்னப்பட்டிருக்கும். இயற்கையோடு ஒன்றிய இந்த மனித வாழ்வு இயற்கை சிகிச்சை முறைகளையே நாடுதல் நன்மை தரும். பொதுவாக அனைத்து வலிகளிலும் மிகவும் தொல்லை தருவது கழுத்து வலி தான்.

இதயத்தில் இருந்து மூளைக்கும், மூளையில் இருந்து உடம்போடு மற்ற இடங்களுக்கும் ரத்தத்தை கொண்டு செல்கின்ற நரம்புகள் கழுத்து பகுதியில் தான் உள்ளது. அந்த நரம்புகள் பாதிப்புக்குள்ளாகும்போது தான் கழுத்து வலி ஏற்படுகிறது.

அதனை சாதாரண வலி என்று நினைத்து விட்டாலோ அல்லது வெறும் வலி நிவாரணிகள் எடுத்தாலோ நிச்சயம் கழுத்து வலி தொடர் கதையாகிவிடும். சுளுக்கு என்று நினைத்து அடிக்கடி எண்ணெய் வைத்து தேய்த்து கொண்டிருந்தாலும் தலை சுற்றலில் கொண்டுபோய்விடும். பெரும்பாலான கழுத்துவலிகள் கழுத்து எலும்பு தேய்மானம் என்றே எடுத்துக் கொள்ளப்படுகிறது.

ஆனால், உண்மை என்னவென்றால் கழுத்து தேய்மானம் மிகவும் வயதானவர்களுக்கே வரும். மற்றபடி கழுத்து எலும்புகள், கழுத்து நரம்புகள் ஆகியவை சந்திப்புகளில் வரக்கூடிய பாதிப்புகளால் தான் வலி அநேக பேருக்கு வருகிறது. சிலருக்கு கழுத்து தோள்பட்டை மற்றும் கைகள் வரை நீண்டவலி தென்படும். மேலும், மரத்துப்போகும். நடுக்கமும் ஏற்படலாம்.

பொருட்களை பிடிக்க வலுவில்லாமலும் போகக்கூடும். சிலருக்கு கடுமையான வலி ஏற்படலாம்.

கழுத்துவலி இருப்பவர்கள் செய்ய கூடாதவை :

கழுத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது. படுத்துக்கொண்டே டி.வி. பார்க்கக்கூடாது. கடுமையான வேலைகளை தொடர்ந்து செய்யக்கூடாது. தலைக்கு சுமை தரும் வேலைகளை செய்தல் கூடாது. வண்டி ஓட்டுதல், வீட்டு வேலை தொடர்ந்து மணிக்கணக்கில் செய்தல், கழுத்துவலியினை அதிகப்படுத்தும்.


yt_middle
பித்த உணவுகளை அதிகம் உண்பவர்கள், எண்ணெய் பதார்த்தங்களை உட்கொள்பவர்கள், நினைத்தவுடன் அதிகமாக மருந்து மாத்திரைகளை உட்கொள்பவர்களுக்கு கூட அதிகமாக கழுத்துவலி ஏற்படும். உணவு முறைகளில் கவனம் இருத்தல் வேண்டும். மன அழுத்தம் கழுத்து வலியினை அதிகப்படுத்தும்.

வலியை தவிர்க்க செய்ய வேண்டியவை :

கழுத்து தசைகளை பலப்படுத்த அதே நேரம் இறுக்கமான தசைகளை தளர்த்தும் பயிற்சிகளையும் தகுந்த ஆலோசனைப்படி செய்தல் வேண்டும். தூங்கும்போது மெலிதான தலையணை வைத்து தூங்க வேண்டும். தலையணை இல்லாமல் படுத்தும் கூட நரம்புகளில் அழுத்தம் தரலாம்.

கம்ப்யூட்டர் பார்க்கும் போது, கண்களை விட 20 டிகிரி தாழ்வாகவும், கண்களில் இருந்து 20 இன்ச் இடைவெளி விட்டும் இருத்தல் வேண்டும். நேரம் கடந்து உணவினை எடுத்தல் கூடாது. அது ஜீரணமாகாமல் வயிற்றில் ஏற்படுத்தும் வாயுவினால் கழுத்தில் அழுத்தம் தரும். அதனால் எளிதில் ஜீரணமாகின்ற உணவினை எடுக்க வேண்டும். தசை நீட்டல் பயிற்சி செய்தல் வேண்டும். இது வயிற்றிலுள்ள வாயுவை போக்கி கழுத்து தசைகளை மென்மையாக்க உதவும்.

சிகிச்சை முறைகள் :

தாய் உருவு சிகிச்சை, குத்தூசி சிகிச்சை, மாக்ஸா எனும் சூடு சிகிச்சை மற்றும் இதமான அழுத்துதல் மூலம் கழுத்து வலி மிக நல்ல நிவாரணம் தரும். அதிலும் “சிக், சாக்” எனப்படும் சிறப்பு உருவ சிகிச்சை மூலம் எலும்புகள், தசைகள் மற்றும் நரம்புகள் சந்திப்பில் உள்ள வலிகளை போக்கி இறுக்கத்தை குறைத்துவிடும். ரத்த ஓட்டம் சீரடைந்து வலிக்கு தீர்வு தரும். வெப்ப சிகிச்சை அளிக்கும் போது அழுத்தம் நீக்கப்பட்டு தசைகள் பலம் பெறும். மேலும், எங்களது சுசான்லி மருத்துவமனையில் ஓரியண்டல் சிகிச்சையின் மூலம் 10 நாட்கள் சிகிச்சையில் பெரும் பலனை எதிர்பார்க்கலாம்.

யோகா முறைகளும், எளிய கழுத்து பயிற்சிகளும் உணவு முறைகளும் கற்றுத்தரப்படும். தசை நீட்டு பயிற்சியும் எளிமையாக கற்றுத்தரப்படும். இதனால் எவ்வித விளைவும் இன்றி சிகிச்சை நல்ல பலனை தரும்.

-- டாக்டர் உஷாரவி
தி சுசான்லி அக்குபஞ்சர் ஆயுர்வேதிக் மருத்துவமனை
கடலூர் மஞ்சக்குப்பம்


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


fb_right
Telegram_Side
Twitter_Right
mobile_App_right
Insta_right