கோவையில் கால்நடைகளுக்காக ஒரு கோவில்

 Saturday, March 14, 2020  02:30 PM   No Comments

கோவை மாவட்டம் வேலந்தாவளம் அருகே பிச்சனூரில் கால்நடைகளுக்கு மரியாதையை கொடுக்கும் ஒரு சிறப்பு திருவிழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இங்கு பால் வார்த்து கால்நடை பெருக நேர்த்திக்கடன் செய்யப்படுகிறது.

கால்நடைகளின் உழைப்புக்கு மரியாதை கொடுக்கும் திருவிழாவாக, விவசாயிகளால் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. கோவையில் தை முதல் நாள் முதல் ஐந்து நாள் வரை திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழா கால்நடைகளுக்கு நோய், ஆபத்தும் நேராமல் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஆல்கொண்ட மாதேஸ்வர கடவுளுக்கு பால்வார்த்து வேண்டுதல் செய்யும் நாள் ஆகும்.


yt_middle

கோவை மாவட்டத்தில் உடுமலை பகுதியில் புகழ்பெற்ற ஆல்கொண்டமால் கோவில் உள்ளது. இதையடுத்து, வேலந்தாவளம் அருகே பிச்சனூரில் உள்ள மாதேஸ்வரன் கோவிலும், கிணத்துக்கடவு அருகே கல்லாரபுரம் மாலகோவிலும் பிரசித்தி பெற்ற தலங்களாகும். தை முதல் நாளில் இருந்து தொடர்ந்து ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் இத்திருவிழா, ஆண்டுதோறும் பிச்சனூர் ஆல்கொண்ட மாதேஸ்வரன் கோவிலில் சிறப்பாக நடக்கிறது.

முதல் இரண்டு நாட்களில் பெரிய அபிஷேகமும், மூன்றாவது நாளில் பால் அபிஷேகம், நான்காவது நாளில் தீர்த்தாபிஷேகம், கடைசி நாளான இன்று தரிசனமும் நடக்கிறது. உழவர் திருநாளன்று விவசாயிகளும், பொதுமக்களும் தாங்கள் வளர்க்கும் பசுமாட்டு பாலை கொண்டு வந்து கால்நடைகள் நலமுடன் இருக்கவும், கால்நடைகள் மென்மேலும் பெருகவும் வழிபடுவர். இதை முன்னிட்டு, மண்ணால் செய்யப்பட்ட கால்நடை உருவங்களுக்கு மாலை அணிவித்து, பூஜித்து நேர்த்திக்கடனாக தெய்வத்தின் பாதங்களில் சமர்ப்பித்து வழிபாடு செய்வர்.

இந்த வழிபாட்டில் பிச்சனூர், ரங்கசமுத்திரம், வீரப்பனூர், பாட்டம்பாறை, கொம்மாண்டாம்பாறை, குமிட்டிபதி, அப்பாச்சிகவுண்டன்பதி, வேலந்தாவளம், ஒழலப்பதி,கொழிஞ்சாம்பாறை உள்ளிட்ட, 35 கிராமங்களில் இருந்து மாட்டுவண்டிகளிலும், வாகனங்களிலும் வந்து வழிபாடு மேற்கொள்வர். இது தவிர, பொங்கல் நாட்களில் ஈன்ற கன்றுகளை நேர்த்திக்கடன் செய்ய மாதேஸ்வரனுக்கு அர்ப்பணித்து வழிபாடு நடக்கும்.Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

fb_right
Twitter_Right
Insta_right
mobile_App_right
Telegram_Side