கொங்கு மண்ணை நெல் விளையும் பூமியாக மாற்றிய - அமராவதி ஆறு

 Saturday, March 14, 2020  04:30 PM   No Comments

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பல கிளை நதிகளாக உருவாகி சின்னாறு அருகே சங்கமித்து சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து பின்னர் காவிரியில் கலக்கிறது.

சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் அவ்வப்போது ஏற்படும் வெள்ளப்பெருக்கில் அமராவதி ஆற்றை ஒட்டிய பல கிராமங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டது. 1950களில் தமிழகத்தில் வேளாண் உற்பத்தியை பெருக்க பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டம், பவானிசாகர் அணை பாசன திட்டம் என பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது தான் அமராவதி ஆற்றில் ஒரு அணையை கட்டி தண்ணீரை தேக்கினால் அப்போதைய உடுமலை தாலுகாவின் கிழக்கு பகுதி, தாராபுரம், கரூர் பகுதிகளில் ஒரு லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும். அங்குள்ள மண் வளத்திற்கு நெல் விளையும் பூமியாகவே மாற்றமுடியும் என பசுமை புரட்சிக்கு வித்திட்ட சி.சுப்ரமணியம் கூறியுள்ளார்.

அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த ராஜாஜியும் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கி 1953ம் ஆண்டு அணை கட்டும் பணிகள் துவங்கின. பாதி பணிகள் முடிவடைந்திருந்தது. நான்கு பணியாளர்கள் அணை கட்ட தேவையான கற்களை ஒரு வண்டியில் ஏற்றிக்கொண்டு கட்டுமானம் நடந்த இடத்திற்கு சென்றனர்.

அதே வண்டியில் பயணம் செய்த துணை பொறியாளர் பார்த்தசாரதி, பணியாளர்கள் அந்தோணி, ஏசைய்யா, பழனிச்சாமி கவுண்டர், ஆறுமுகம் என 4 பேர் பயணம் செய்துள்ளார். திடீரென அந்த வண்டி கவிழ்ந்து அதில் பயணம் செய்த பணியாளர்களும், பொறியாளரும் கற்களுக்கு மத்தியில் சிக்கி உயிரிழந்தனர். திடீரென ஒரு நாள் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பின்னர் சில காலம் அணை கட்டும் பணி நிறுத்தப்பட்டது.

பின்னர் ஒரு வழியாக 1957ம் ஆண்டு காமராஜ் முதலமைச்சராக இருந்தபொழுது கட்டி முடிக்கப்பட்டது. 90 அடி உயரத்தில் கட்டப்பட்ட இந்த அணையால் தற்போது திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு மூலம் 54 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. அதேபோல் 100க்கும் மேற்பட்ட கிராமங்களும் குடிநீர் வசதி பெறுகிறது. உயிரிழந்தவர்களின் நினைவுகள் காலம் முழுவதும் அழியாமல் இருக்க, அணையிலேயே கல்வெட்டாக பதித்து வைத்துள்ளனர்.

4 டி.எம்.சி இருந்த நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு தற்போது தூர் சேர்தலால் 3 டி.எம்.சியாகக் குறைந்து விட்டது. இந்த அணை வேளாண்மைக்காகவும் வெள்ளக்கட்டுப்பாட்டிற்காகவும் முதன்மையாகக் கட்டப்பட்டது. 2005 - 2006 நிதியாண்டில் இத்திட்டப் பகுதியில் வணிக விவசாயத்தின் மூலம் கிடைத்த வருமானம் ரூ. 43,51,000 என மாநில அரசு மதிப்பிட்டுள்ளது. 2003-04 ஆண்டில், அணையின் பயன்பாட்டை கூடுதலாக்க தமிழ்நாடு மின்சார வாரியம் 4 மெகாவாட் திறனுள்ள நீர் மின் ஆற்றல் மின் நிலையத்தை அமைக்கத் திட்டமிட்டது; இந்நிலையம் தற்போது இயங்கி வருகிறது.

மீன்வளம்

yt_middle


இங்கு உள்ளூரல்லாத திலாப்பியா வகை மீன்கள்1950களில் விடப்பட்டு 1970களில் மாநிலத்தின் மிக கூடுதலான மீன்பிடி இடமாக விளங்குகிறது. தற்போது இங்கு பிடிக்கப்படும் மீன்களில் பெரும்பான்மையாக திலாப்பியா மீன்கள் உள்ளன. மீன்வலைகள் வீசப்பட்டு மீன்கள் பிடிக்கப்படுகின்றன. ஒரு மீனவர் ஒருநாளைக்கு 20 கிலோ வரை மீன் பிடிக்க முடிகிறது.ஆண்டுக்கு 110 டன் மீன்கள் கிடைக்குமென வனத்துறை மதிப்பிடுகிறது. 1972ஆம் ஆண்டில் ஆண்டொன்றிற்கு ஹெக்டேர் ஒன்றிற்கு 168 கிலோ கிடைத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மீன்வளத்துறை இங்குள்ள பழங்குடியினருக்கு மீன்பிடிக்க உரிமை வழங்குமுகமாக அமராவதிநகர் பழங்குடி மீனவர் கூட்டுறவுச் சங்கம் அமைத்துக் கொடுத்துள்ளனர். 2007ஆம் ஆண்டு கரட்டுப்பதி பழங்குடி மக்கள் 50 பேர் இச்சங்கத்தில் இணைந்து அவர்களில் எட்டு பேருக்கு மீன்பிடி உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

முதலை வளர்ப்பு மையம்

சேற்று முதலைகள் அல்லது பாரசீக முதலைகள் என அழைக்கப்படும் மக்கர் முதலைகள் இங்கு பிடிபடாத நிலையில் இயற்கையாக விடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இவை மீன்கள் பிற ஊர்வன மற்றும் சிறிய,பெரிய பாலூட்டிகளை உண்டு வாழ்கின்றன.சிலநேரங்களில் மனிதர்களுக்கும் இவை தீங்கு விளைவிக்கக்கூடியவை. இவற்றின் இருப்புத்தொகை 60 பெரியவைகளாகவும் 37 சற்றே இளையவையாகவும் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. இங்குள்ள மீனை உண்டு வாழும் பிற உயிரினங்கள்:சிறு ஓட்டர்கள் (Oriental Small-clawed Otter), இந்திய நீர் காகங்கள், இந்திய ஆமைகள்

அணையிலிருந்து ஒரு கி.மீ முன்னரே அமராவதி சாகர் முதலைப் பண்ணை 1976ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு குட்டி முதலைகளை வளர்த்து பெரியவையானதும் இயற்கைச்சூழலில் விடப்படுகிறது. நீர்த்தேக்கத்தின் ஓரமாக காட்டு முதலைகளின் முட்டைகள் எடுத்து வரப்பட்டு இப்பண்ணையில் குஞ்சு பொறித்து வளர்க்கப்படுகின்றன. இங்கு சிறியதும் பெரியதுமான முதலைகள் ஒன்றின் மேல் ஒன்றாக ஏறி விளையாடுவதைக் காணலாம். இங்கு 98 முதலைகள் (25 ஆண்+ 73 பெண்)பிடிபடு நிலையில் பராமரிக்கப்படுகின்றன.

அணையில் அழகான பூங்காவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் உயரமான படிகளில் ஏறி ஆனைமலை மற்றும் பழனிமலை பகுதிகளைக் காண இயலும். இது மாவட்ட சுற்றுலா மையமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.

பூங்காவும் முதலைப்பண்ணையும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்துள்ளது. கோவையிலிருந்து பொள்ளாச்சி, உடுமலை வழியாக 96 கிமீ (59.65 மை) தொலைவில் உள்ளது.முதலைப்பண்ணை அருகேயுள்ள வனத்துறை ஓய்வகத்தில் நான்கு பேர் தங்க இடவசதி உள்ளதுSimilar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

mobile_App_right
fb_right
Telegram_Side
Twitter_Right
Insta_right