கோயமுத்தூரில் மருதமலை முருகன் கோவிலில் பாம்பாட்டி சித்தரின் ஜீவசமாதி

 Sunday, March 15, 2020  08:30 PM  1 Comments

கோயமுத்தூரில் உள்ள மருதமலை முருகன் கோவிலில் பாம்பாட்டி சித்தரின் ஜீவசமாதி கோயில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

* சர்ப்ப ரூபத்தில் பாம்பாட்டி சித்தர் நடமாடுவதாகவும் அந்த சர்ப்பத்திற்கு சில பக்தர்கள் பால் இட்டு பாதுகாப்பதாகவும் அதனால் சர்ப்பத்தையே பாம்பாட்டி சித்தராக வழிபடுவோர் இப்பகுதிகளில் உண்டு.

* பாம்பாட்டி சித்தர் சித்தாரூடம் என்ற நூலை எழுதியவராவார். மனிதர்களின் மனதை பாம்பாக ஒப்பிட்டு பாடல்கள் புனைந்தவர். குண்டலினியோகம், கூடு விட்டு கூடு பாயும் சித்தி பல அஷ்டமா சித்துக்கள் அறிந்தவர்.

* பாம்பாட்டி சித்தர் இளமைக்காலத்தில் பாம்பு பிடிப்பது, விஷமெடுப்பது, என பல காடுகளில் திரிந்து தமது வாழ்வாதாரத்தை நகர்த்தி கொண்டிருந்தார்.

* ஒரு முறை மருதமலை அடிவாரம் வந்த போது பாம்பாட்டி சித்தர் பற்றி அறிந்தவர்கள் மலை மேலே நவரத்தினம் மாணிக்க கல் உடைய நாகசர்ப்பம் உள்ளது என சிலர் ஆசை காட்டினர்.

* இந்த பாம்பை பிடித்தால் கோடீஸ்வரனாகி விடலாம் என ஆசைகூற பாம்பாட்டி சித்தருக்கும் ஆசை ஏற்பட மருதமலை ஏறி மாணிக்கல் உடைய பாம்பை தேடினார்.

yt_middle

* இரவு நடு நிசியில் அடந்த காட்டில் பாம்புக்காக காத்திருந்த பாம்பாட்டி சித்தருக்கு திடிரென வெளிச்சத்துடன் தெய்வீக வாசனையுடன் நின்றிருந்த சட்டை முனி சித்தரை சந்தித்தார்.

முதலில் உனது உடலில் ஓடும் குண்டலினி என்ற பாம்பைத் தேடு என்ற சட்டை முனியின் ஆலோசனைக்கு ஏற்ப அவரிடமே குண்டலினி, உள்ளிட்ட கலைகளை கற்று தேர்ந்து ஞானம் பெற்றார்.

* குண்டலினி மட்டுமல்லாது கூடுவிட்டு கூடு பாய்தல் உள்ளிட்ட கலைகளையும் சட்டை முனியிடம் கற்று தேர்ந்தார்.

* தன் கடுமையான பயிற்சியால் பணத்தை தேடுவதை விட்டொழிந்து உலகில் யோகங்களை தேடி வெற்றிகண்டார்.

* இவரை வணங்குபவர்களுக்கு ராகு கேது மற்றும் சர்ப்பதோஷ நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.

* பாம்பாட்டி சித்தர் மருதமலை மட்டுமல்லாது ஒரே சித்தர் 8 இடங்கள் வரை ஜீவசமாதியாகும் என்ற கருத்திற்கேற்ப துவாரகை , விருத்தாச்சலம், சங்கரன் கோவில் மேற்கு கோபுர வாசல் அருகில், புளியங்குடி செல்லும் வழியில் உள்ள பாம்பாட்டி சித்தர் ஜீவசமாதிபீடம் ஆகிய இடங்களில் ஜீவசமாதியாகி உள்ளதாக கூறப்படுகிறது.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

User Comments...


parthipan parthipan commented on 2 week(s) ago
இது பாம் பாட்டி சித்தர் வரலாறு மருதமலை வரலாறு இல்லை
Subscribe to our Youtube Channel


mobile_App_right
Insta_right
Twitter_Right
fb_right
Telegram_Side