கொரோனா எப்படி பரவுகிறது? தற்காத்துக்கொள்வது எப்படி?

 Tuesday, March 17, 2020  10:35 AM

கடந்த 1 மாதத்திற்கும் மேலாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இந்தியாவிலும் நுழைந்துள்ள இந்த கொரோனா வைரஸ் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்திலும் பள்ளிகள், கல்லூரிகள், சுற்றுலா தளங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளன. மக்களின் வாழ்கை முறையே மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கான நேரடி மருந்து இன்னும் கண்டுபிடிக்க படவில்லை, இருப்பினும் இது குறித்த ஆராய்ச்சிகள் உலகம் முழுக்க நடந்து வருகிறது. ஜெர்மனியில் கொரோனாவை தடுக்க மறுத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த மருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்து சோதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் இந்த வைரஸ் பதிப்பில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள அதனை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வது மிகஅவசியம் ஆகும்.

அது என்ன கொரானா வைரஸ்?

2019-nCoV என்று பெயரிடப்பட்டுள்ள நாவல் கொரோனா வைரஸ் சீனாவின் ஊஹான் மாகாணத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள வூஹானில் உள்ள அசைவ உணவுகளின் சந்தையில் இருக்கும் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து பரவி இருப்பதாக சீன அதிகாரிகள் கூறுகிறார்கள். விலங்கில் இருந்து இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவும் என்பதை அந்நாட்டு தேசிய சுகாதார கவுன்சில் உறுதி செய்துள்ளது. ஊஹான் மாகாணத்தில் இருந்து நாட்டின் பிற பகுதிக்கு சென்றவர்கள் மூலமாகவும் இந்த வைரஸ் மற்றவர்களுக்கு பரவத் தொடங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது?

கொரோனா வைரஸ் தும்மல், இருமல் வழியேதான் அதிகமாக பரவுதாக சுகாதராத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால், மிக எளிதாக ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு வைரஸ் பரவும்.

கொரோனா பாதிக்கப்பட்டால் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்...?


yt_custom
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல் ஏற்படும். அதன் பிறகு, வறட்டு இருமலை உண்டாகி, ஒரு வாரத்திற்குப் பிறகு, மூச்சுத் திணறலுக்கு வழிவகுக்கிறது. இந்த வைரஸால் தாக்கப்பட்ட நான்கில் ஒருவருக்கு உடல்நிலை மிகவும் மோசமடைவதாக தெரிகிறது. இந்த வைரஸால் உறுப்பு செயலிழப்பு, நிமோனியா உள்ளிட்டவையும், அதிகபட்சமாக உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது.

கொரோனாவிற்கு மருந்து இருக்கிறதா...?

கொரோனா வைரஸை தாக்குப்பிடிக்கும் அளவுக்கு மனிதர்களுக்கு வழங்க கூடிய நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் எதுவும் இப்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் கிருமி நாசினிகள் மூலம் பொதுவெளியில் பரவாமல் தடுக்க நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே, கொரோனா வைரஸை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுவதைத் தடுப்பதே இப்போதைக்கு இருக்கும் ஒரே தெரிவு. இதனால், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வைரஸ் மற்றவர்களுக்கு பரவுவதை தடுப்பதே தற்போது முதன்மை நோக்கமாக இருக்கிறது. எச்.ஐ.வி.க்கு அளிக்கப்படும் மருந்துகளை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்து, அதன் மூலம் மருந்து கண்டறியும் முயற்சியிலும் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

எப்படி தற்காத்துக்கொள்வது...?

இருமல், தும்மல், சளி, வறண்ட தொண்டை, காய்ச்சல் போன்றவை இரு நாட்களுக்கு மேல் தொடர்ந்தால் கண்டிப்பாக மருத்துவரை அனுகவும். நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் மூக்கு - வாயை மறைக்கும் மாஸ்க் அணிந்து கொண்டு வெளியே செல்வது நல்லது. சத்தான உணவு, பாதுகாப்பான குடிநீர் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும். கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். எப்போதும் கை கழுவுதல், சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் அவசியம். இருமல், தும்மலின் போது மூக்கு-வாயை துணியால் மூடிக்கொள்வதும் அவசியம்


yt_middlePlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Twitter_Right
Telegram_Side
Insta_right
fb_right
mobile_App_right