கோவையின் பழமையை பறைசாற்றும் பெரியகடைவீதி போஸ்ட் ஆபீஸ்

 Thursday, March 19, 2020  04:07 PM

கோவையின் பழமையை பறைசாற்றும் பெரியகடைவீதி போஸ்ட் ஆபீஸ்; 100 ஆண்டுகளை கடந்த போதும், பழமை மாறாமல் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது.

கோவையில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக, மக்கள் சேவையில் தொடர்ந்து இருப்பது போத்தனுார் மற்றும் பெரியகடைவீதியில் உள்ள பஜார் போஸ்ட் ஆபீஸ்கள் தான். அதிலும், பஜார் போஸ்ட் ஆபீஸ்.

மிகப்பழமையான பஜார் போஸ்ட் ஆபீஸ், பெயரளவில் தான் பழையது; ஆனால், கட்டடத்தின் உள்பகுதி காலத்துக்கேற்ப நவீன மயமாக்கப்பட்டு பளபளக்கிறது. கோவையின் பெருமையை இன்றளவும் பறைசாற்றி வரும் இந்த போஸ்ட் ஆபீஸ், 1914ல் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அன்று முதல் இன்று வரை 100 ஆண்டுகள் கண்ட போதிலும், பழமையை வெளிக்காட்டிக் கொள்ளாமல், பல்வேறு மாற்றங்களுடன் சிறப்பாக செயல்படுகிறது.இந்த வீதியில் நகைக் கடைகள் ஏராளமாக உள்ளன.


yt_middle
இதேபோல் மக்கள் நடமாட்டமும் இங்கு அதிகம். இந்த போஸ்டாபீசில் தான் நகைக்கடை உரிமையாளர்கள் பலர் கணக்கு வைத்திருந்தனர். பிற நகரங்களில் செயல்படும் நகைக்கடைகளுக்கும், தங்க நகை வியாபாரிகளுக்கும் இன்சூரன்ஸ், நகைகள், தங்கக்கட்டிகள், தங்க காசுகள் பார்சலில் அனுப்பி வைக்கப்பட்டன.

சுற்றுப்பகுதி நகரங்களில் அதிகளவு நகைக்கடைகள் இல்லை என்பதால், கோவை தான் தங்க நகை தயாரிப்புக்கும், தங்கத்தின் அன்றாட விலையை அறிவிக்கும் பொது இடமாகவும் செயல்பட்டு வந்தது. அன்றைய விலையை அன்றே அறிந்து கொள்ள இப்போஸ்ட் ஆபீசில், தந்தி சேவை அதிகளவில் பயன்படுத்தப்பட்டன. இதற்காக ஒரு பணியாளர் இரவு முழுவதும், பணியில் அமர்த்தப்பட்டிருந்தார்.

கோவையில் 100 ஆண்டு கண்ட இப்போஸ்ட் ஆபீஸ் பற்றி, ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர் ஹரிகரன் கூறுகையில், 'கோவை யின் மிகப்பழமையான போஸ்ட் ஆபீஸ்களில் இதுவும் ஒன்று. சொந்த கட்டடத்தை கொண்டுள்ள இந்த அலுவலகம் பழமை வாய்ந்த கட்டடம் என சொல்ல முடியாத அளவுக்கு உள்ளே தேக்குமரத்தாலான வேலைப்பாடுடன் கூடிய துாண்கள் மற்றும் அலுவலக பொருட்கள் உள்ளன. வெளியூருக்கு நகைகள், பணம் அனுப்ப மிகவும் பாதுகாப்பான சேவை இங்கு நடக்கிறது,' என்றார்.

போஸ்ட் பீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'கோவை நகரின் மையப்பகுதியில் மட்டுமல்லாது, பெரிய கடைவீதியில் தங்க நகைக்கடைகள் உள்ள வீதியில் உள்ளதால் இதன் பெருமை மெருகேறி உள்ளது. ஏற்கனவே, கோவை தலைமை தபால் அலுவலகம் மற்றும் மத்திய தபால் அலுவலகம் ஆகியவற்றில், 'கோர் பேங்கிங் சிஸ்டம்' துவக்கப்பட்டுள்ளது. இந்த வசதியால், இந்த அலுவலகத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் நாட்டின் எந்தப்பகுதியில் இருந்தும் தங்கள் செலவுக்கோ அல்லது வியாபாரத்துக்கோ பணத்தை எடுத்துக் கொள்ள முடியும். விரைவில், 'கோர் பேங்கிங்' வை பஜார் போஸ்ட் ஆபீசிலும் துவங்கப்படுகிறது' என்றார்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


mobile_App_right
fb_right
Twitter_Right
Telegram_Side
Insta_right