இன்றைய தினம் - மார்ச் 21

 Saturday, March 21, 2020  06:42 AM

1. உலக காடுகள் தினம்

உலக காடுகள் தினம் (International Day of Forests) - பருவ கால நிலை பெரும்பாலும் சீராக இருப்பற்கு காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய காடுகள் அழிவதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவே மார்ச் 21ம் தேதி உலக காடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில் காடுகளால் மனிதர்களுக்கு ஏற்படும் நன்மைகள் எடுத்துச் சொல்லப்படுகிறது. மேலும் வன வளத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் எடுத்து சொல்லப்படுகிறது.

2. உலக பொம்மலாட்ட நாள்

உலக பொம்மலாட்ட தினம் (World Puppetry Day) - பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்றான பொம்மலாட்டம், பொம்மைகளில் நூலைக் கட்டி திரைக்கு பின்னால் இருந்து இயக்கியபடி கதை சொல்லும் கலையாகும். இது 'கூத்து' வகையை சேர்ந்தது. மரப்பாவைக்கூத்து, பாவைக்கூத்து என்ற பெயர்களாலும் இக்கலை அழைக்கப்படுகிறது. நாட்டுப்புற மரபுரிமைகளிடையில் ஒரு தனிப்புகழை கொண்டுள்ள தொடர்பாடல் ஊடகமாகவே இப் பொம்மலாட்டத்தை அறிமுகப்படுக்கலாம். இன்று பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை சாத்தியமாக்குகிற திரைப்படத்தின் மூதாதையாகவும் இந்த கலை கருதப்படுகின்றது.

3. பன்னாட்டு வண்ண நாள்

பன்னாட்டு வண்ண நாள் (International Colour Day (ICD) எனும் இந்நாள், - கருத்து காட்சி, மக்கள் வாழ்வியல் கோட்பாடுகள், மற்றும் உண்மையியல் உணர்தல் போன்ற மிகவும் பெரியதாக உதவகூடியதாகவும், உலகம் சுற்றியுள்ள மறக்கமுடியாத வண்ண நடவடிக்கைகள் பெருகிய முறையில் அனைத்துலக வண்ணம் நாள் உருவாக்கி கொண்டாடப்பட்டு வருகின்றன.

4. உலகக் கவிதை நாள்

உலகக் கவிதை நாள் (World Poetry Day) - இது, உலகம் முழுவதும் கவிதை வாசிக்கவும், எழுதவும், வெளியிடவும் மற்றும் போதனை செய்யவும், ஊக்குவிக்கும் பொருட்டு யுனெஸ்கோ எனும் ஐக்கிய பண்பாட்டு நிறுவனத்தால் 1999 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

5. இனப்பாகுபாட்டை நீக்குவதற்கான பன்னாட்டு நாள்

இனப்பாகுபாட்டை நீக்குவதற்கான பன்னாட்டு நாள் (International Day for the Elimination of Racial Discrimination) - 1960 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் நாளில் தென்னாப்பிரிக்காவின் ஷாடெங்கிலுள்ள ஷார்ப்வில் நகர்ப்புறத்தில் நிகழ்ந்த, இனவொதுக்கலுக்கு எதிரான அமைதிப்பேரணியின்போது அந்நாட்டுக் காவல்துறையினரால் 69 பேர் கொல்லப்பட்டனர். எல்லா வகை இனப்பாகுபாட்டையும் ஒழிக்க முயற்சிசெய்யுமாறு பன்னாட்டுச் சமூகத்தை வேண்டிய ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 1966 ஆம் ஆண்டில் மார்ச் 21-ஐ இனப்பாகுபாட்டை நீக்குவதற்கான பன்னாட்டு நாளாக அறிவித்தது.

6. உலக டவுன் நோய்க்கூட்டறிகுறி நாள்

உலக டவுன் சிண்ட்ரோம் தினம் நோய் எப்போதும் மனிதனின் பகுதியாகவே உள்ளது. டவுன் சிண்ட்ரோம் என்பது மனவளர்ச்சி குன்றியதைக் குறிப்பிடுகிறது. இந்த நோயானது மனித செல்லுக்குள், குரோமோசோமில் ஏற்படும் பிழையால் ஏற்படுகிறது. இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ.நா. பொதுச்சபை 2011ஆம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில் மார்ச் 21ஐ உலக டவுன் சிண்ட்ரோம் தினமாக அறிவித்தது.

7. சர்வதேச தடுத்து வைக்கப்பட்ட, காணாமற்போன பணியாளர்களுடன் கூட்டு ஒருமைப்பாடு நாள்

தடுத்து வைக்கப்பட்ட, காணாமற்போன பணியாளர்களுடன் கூட்டு ஒருமைப்பாட்டுக்கான பன்னாட்டு நாள் (International Day of Solidarity with Detained and Missing Staff Members) என்பது ஐக்கிய நாடுகளினா ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 25 கடைப்பிடிக்கப்படும் நாளாகும்.


yt_middle
---------------------------

1923 – பொள்ளாச்சி நா. மகாலிங்கம், தமிழகத் தொழிலதிபர், மக்கள் சேவையாளர் (இ. 2014) பிறந்த தினம்

1857 - டோக்கியோவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 100,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

1948 - முகமது அலி ஜின்னா உருது மட்டுமே பாகிஸ்தானின் அரசு மொழியாக இருக்கும் என டாக்காவில் வைத்து அறிவித்தார்.

1970 - முதலாவது பூமி நாளுக்கான அழைப்பை சான் பிரான்சிஸ்கோ மேயர் ஜோசப் அலியோட்டோ விடுத்தார்.

1984 - மணலாறு பிரதேசத்தைத் தடைவலயமாக்கி இலங்கை அரசு அங்கிருந்த தமிழர்களை அடித்து விரட்டினர்.

1990 - 75 ஆண்டுகால தென்னாபிரிக்க ஆட்சியிலிருந்து நமீபியா விடுதலை பெற்றது.

1994 - ஸ்டீவன் ஸ்பில்பேர்க் இயக்கிய Schindler's List ஏழு ஆஸ்கார் விருதுகளை வென்றது.

1807 – சைமன் காசிச்செட்டி, தமிழ் புளூட்டாக் நூலை எழுதிய ஈழத்தவர் (இ. 1860) பிறந்த தினம்

1867 – பாண்டித்துரைத் தேவர், தமிழகத் தமிழறிஞர் (இ. 1911) பிறந்த தினம்

1966 – ஷோபனா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை பிறந்த தினம்

1978 – ராணி முகர்ஜி, இந்திய திரைப்பட நடிகை பிறந்த தினம்

1980 – ரொனால்டினோ, பிரேசில் காற்பந்து வீரர் பிறந்த தினம்

1998 – இராமநாதபுரம் சி. சே. முருகபூபதி, தமிழக மிருதங்கக் கலைஞர் (பி. 1914) நினைவு தினம்

2016 – பிலிம் நியூஸ் ஆனந்தன், தமிழகப் பத்திரிகையாளர் (பி. 1928) நினைவு தினம்


yt_customPlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Insta_right
Telegram_Side
Twitter_Right
mobile_App_right
fb_right