கோவை மாவட்டத்தில் தடையை மீறி வாகனம் ஓட்டிய 122 பேர் கைது


Source: Maalaimalar
 Thursday, March 26, 2020  10:10 AM

கோவை மாவட்டத்தில் தடையை மீறி மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் சுற்றியதாக 122 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொரோனா வைரஸ் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து கோவையில் தடையை மீறி வாகனங்களில் சென்றவர்களை மடக்கிப்பிடித்து போலீசார் விசாரித்து எச்சரித்து அனுப்பி வருகிறார்கள். சரியான காரணத்தை சொன்னவர்களை போலீசார் அனுப்பி விட்டனர். முன்னுக்குப்பின் முரணாக பேசிய இளைஞர்களை தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

கோவை கணபதி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த 10-க்கும் மேற்பட்ட வாலிபர்களை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் சரியான காரணத்தை சொல்லவில்லை. இதையடுத்து போலீசார் அவர்களை தோப்பு கரணம் போட வைத்து அனுப்பினர்.

yt_middle

மேலும் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் சுற்றியதாக கோவை மாநகரில் 23 வழக்குகள் பதிவு செய்து 35 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை புறநகர் பகுதியில் 69 வழக்குகள் பதிவு செய்து 87 பேரை கைது செய்தனர். இவர்கள் மீது தொற்று நோய் தடுப்பு சட்டம், தடையை மீறுதல், சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கைதானவர்களை போலீசார் ஜாமீனில் விடுவித்தனர். மேலும் வால்பாறையில் ஒன்றாக சேர்ந்து கேரம் விளையாடிய இளைஞர்களை போலீசார் விரட்டியடித்தனர். இதே போல் மாவட்டம் முழுவதும் போலீசார் விடிய, விடிய தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் தடையை மீறி வாகனங்கள் ஓட்டியதாக 83 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் 26 மோட்டார் சைக்கிள்கள், 5 கார் பறிமுதல் செய்யப்பட்டது.


yt_custom



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


mobile_App_right
Twitter_Right
fb_right
Insta_right
Telegram_Side