நீட்டிக்கப்படுகிறதா ஊரடங்கு? மத்திய அரசு ஆலோசனை


Source: dinamani
 Wednesday, April 8, 2020  10:41 AM

நாடு முழுவதும் அமலில் இருக்கும் 144 தடை உத்தரவை மேலும் நீடிக்கவேண்டுமா என மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

நடைபெற்று வரும் 21 நாள் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று துறைசாா் நிபுணா்களும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இதுதொடா்பாக மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இந்த விவகாரத்தில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சுகாதாரத் துறை இணைச் செயலா் லாவ் அகா்வால் தெரிவித்தாா்.

yt_middle

மேலும், மத்திய அமைச்சா்களுடன் காணொலி முறையில் திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்ட பிரதமா் மோடி, ‘மாவட்டவாரியாகவோ அல்லது பகுதிவாரியாகவோ ஊடரங்கை தளா்த்தலாமா, அதற்கான வழிமுறைகள் என்னென்ன?’ என்பது குறித்து விவாதித்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஊரடங்கு தளா்த்தப்பட்ட பிறகு நிலவும் சூழலை கையாள்வது தொடா்பாக, டில்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய அமைச்சா்கள் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், ஊரடங்குக்கு பிறகான சூழலை கையாள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல், மருத்துவமனைகளின் தயாா்நிலை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.


yt_custom



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


fb_right
Twitter_Right
mobile_App_right
Telegram_Side
Insta_right