தனித்து இருப்போம்... விழித்து இருப்போம்...


Source: Maalaimalar
 Wednesday, April 8, 2020  02:48 PM

வீதிகளுக்கு செல்வதை தவிர்ப்போம், வீட்டில் இருப்போம், விலகி இருப்போம், விழித்து இருப்போம், கொரோனாவை வெல்வோம் என சபதம் ஏற்போம்.

கொரோனா... 4 மாதத்திற்கு முன்பு வரை இந்த பெயர் யாருக்கும் தெரியாது. இப்போது பட்டி தொட்டி முதல் உலக நாடுகள் வரை அனைத்து மக்களையும் ஆட்டி படைக்கிறது. கண்ணுக்கு தெரியாத இந்த வைரஸ், அரசன் முதல் ஆண்டி வரை பாகுபாடும் பார்க்காமல் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் 4 மாதங்களுக்கு முன்பு தோன்றிய இந்த வைரஸ், இன்று நாடு முழுவதும் பரவி மக்களை பாடாய் படுத்துகிறது. இன்னும் எத்தனை உயிரை காவு வாங்க காத்திருக்கிறதோ என்ற அச்சம் உலக மக்களிடையே நிலவுகிறது. வல்லரசு நாடுகளெல்லாம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறது.

கொத்து, கொத்தாக உயிரை பறிக்கும் வைரஸை அழிக்க மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மட்டுமே முடியும் என்பது உலகம் அறிந்த உண்மை. அதுவும் ஒவ்வொரு வரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதுதான் அதற்கான வழி. எனவேதான் 21 நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்தார் பிரதமர் மோடி. மாநில அரசும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. இப்படி மத்திய- மாநில அரசுகள் கொரோனாவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எது எப்படி இருந்தாலும், இந்த கொடிய வைரஸை இப்போதைக்கு வீழ்த்துவது மக்கள் கையில் தான் உள்ளது. அதாவது கீழ்க்கண்டவற்றை கடைபிடித்து கொரோனாவை வெல்வோம்.

* வீடுகளில் தனித்திருக்க வேண்டும்.

* சளி, காய்ச்சல் இருந்தால் உடனே மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.

* கைகழுவும் திரவத்தால் கைகளை பல தடவை கழுவ வேண்டும்.

yt_middle

* முக கவசம் அணிய வேண்டும்.

* சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற விதியை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.

* நோய் தொற்று இருக்கும் பகுதிக்குள் செல்லக்கூடாது.

கொரோனாவுக்கு எதிரான இந்த போரில் மத்திய- மாநில அரசுகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து கொரோனாவை வீழ்த்துவோம். அதற்காக வீதிகளுக்கு செல்வதை தவிர்ப்போம், வீட்டில் இருப்போம், விலகி இருப்போம், விழித்து இருப்போம், கொரோனாவை வெல்வோம் என சபதம் ஏற்போம். மற்ற நாடுகளை விட நமக்கு பாதிப்பு குறைவு என்றாலும், இனிமேல்தான் கொரோனா வைரஸின் தாக்கம் உச்சத்துக்கு செல்லும் என்று கூறப்படுவதால் வரும் காலங்களில் விழிப்புடன் செயல்பட்டு, கொரோனாவை வெல்வோம்!

ருத்ர தாண்டவம் ஆடும் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் இதுவரை 13 லட்சம் பேரை தாக்கி உள்ளது. 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை காவு வாங்கி உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவரை இந்த வைரஸ் தாக்கினால், அவரை காப்பாற்றுவது கடினமாக உள்ளதாக மருத்துவ ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீரை அருந்தலாம் என பரவலான பேச்சு அடிபடுகிறது. கபசுர குடிநீரை குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டு கொரோனாவுக்கு எதிராக போராடலாம், இது பயனுள்ளதாகவும் இருக்கும் என சித்த மருத்துவர்களும் ஆணித்தரமாக கூறுகிறார்கள். இதனால் நம் மக்கள் கபசுர குடிநீரை அருந்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


mobile_App_right
Telegram_Side
Insta_right
Twitter_Right
fb_right