இன்றைய தினம் - மே 16

 Saturday, May 16, 2020  07:11 AM

1568 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி அரசி இங்கிலாந்துக்குத் தப்பி ஓடினார்.

1888 – நிக்கோலா தெஸ்லா நீண்ட தூரத்திற்கு மாறுதிசை மின்னோட்டம் மூலம் மின்திறன் செலுத்தும் உபகரணம் பற்றிய சொற்பொழிவை நிகழ்த்தினார்.

1891 – செருமனி, பிராங்க்புர்ட் நகரில் இடம்பெற்ற பன்னாட்டு கண்காட்சி ஒன்றில், உலகின் முதலாவது நீண்டதூர உயர்-வலுக் கடத்தி, முத்தறுவாய் மின்னோட்டம் காட்சிப்படுத்தப்பட்டது.

1929 – ஆலிவுடில், முதலாவது அகாதமி விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

1932 – பம்பாயில் இந்துக்களுக்கும் முசுலிம்களுக்கும் இடையே இடம்பெற்ற கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

1969 – சோவியத்தின் வெனேரா 5 விண்ணுளவி வெள்ளிக் கோளில் இறங்கியது.

1975 – பொது வாக்கெடுப்பின் அடிப்படையில் சிக்கிம் இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைக்கப்பட்டது.


yt_middle
1975 – ஜூன்கோ டபெய், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதற் பெண் ஆனார்.

1992 – எண்டெவர் விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை முடித்து பூமிக்குத் திரும்பியது.

2005 – குவைத் பெண்களுக்கான வாக்குரிமையை வழங்கியது.

2006 – தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் கோயில்களில் அர்ச்சகராகத் தகுதி உடையவராக அறிவிக்க மு. கருணாநிதி தலைமையிலான தமிழக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது.

2006 – நியூசிலாந்திற்கருகில் 7.4 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.

1977 – கபிலன், தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர் பிறந்த தினம்

2007 – கு. கலியபெருமாள், தமிழக சமூக, விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1924]) நினைவு தினம்

2010 – அனுராதா ரமணன், தமிழக எழுத்தாளர் (பி. 1947) நினைவு தினம்


yt_customPlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Insta_right
fb_right
Telegram_Side
mobile_App_right
Twitter_Right