பைக்கில் சென்ற பெண் மரக்கிளை முறிந்து விழுந்து பலி


Source: dinamalar
 Friday, May 22, 2020  11:20 AM

மரக்கிளை முறிந்து, பைக்கில் சென்ற பெண் மீது விழுந்ததில், அவர் உயிரிழந்தார். கோவை, பாப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா; மனைவி காயத்ரி, 38. தம்பதியின் இரு பெண் குழந்தைகள், கோவை புலியகுளம் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.


yt_custom
பள்ளியில் நேற்று, வரும் கல்வியாண்டுக்கான புத்தகங்கள் வழங்கப்பட்டன. இவற்றை வாங்க, தம்பதி, நேற்று மதியம், பைக்கில் பள்ளிக்கு புறப்பட்டனர். வழியில், கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் இருந்த மரத்தின் பெரிய கிளை ஒன்று திடீரென முறிந்து, அவர்கள் மீது விழுந்தது. இதில், காயத்ரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இவர்களுடன் அவ்வழியாக பைக்கில் சென்ற சிலரும் காயமடைந்தனர். காயத்ரியை, தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, சிகிச்சை பலனின்றி, அவர் உயிரிழந்தார்.


yt_middle



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


fb_right
mobile_App_right
Twitter_Right
Telegram_Side
Insta_right