கோவையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை குறைந்தது

 Friday, May 22, 2020  12:27 PM  1 Comments

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. கடைகள் திறந்து ஒரு சில நாட்கள் மட்டும் விற்பனை அதிகமாக காணப்பட்டது. அதன்பின்னர் கூட்டம் வரவில்லை. கோவை மாவட்டத்தில் உள்ள 293 டாஸ்மாக் கடைகளும் தற்போது திறக்கப்பட்டுள்ளன.

இனி டாஸ்மாக் கடைகள் மூட முடியாது என்று அனைவருக்கும் தெரிந்து விட்டது. எனவே பொறுமையாக, தேவைப்படும்போது மதுபாட்டில்களை வாங்கிக் கொள்ளலாம் என்று பலர் நினைக்கிறார்கள்.


yt_custom
இதுகுறித்து டாஸ்மாக் நிறுவன ஊழியர் ஒருவர் கூறியதாவது:-

கொரோனா பாதிப்பிற்கு முன்பு இருந்ததை விட தற்போது டாஸ்மாக் விற்பனை குறைந்துள்ளது. இதற்கு காரணம் மக்களிடம் பணபுழக்கம் இல்லை என்று கூறப்படுகிறது. மதுவாங்குபவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளில் விற்பனை சரிந்து வருகிறது. ஊரடங்கிற்கு பிறகு கடைகள் திறந்தபோது கூட்டம் அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது நாள் ஆக ஆக கூட்டம் குறைய தொடங்கியுள்ளது.yt_middlePlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup

User Comments...


SundaramKumaraswami SundaramKumaraswami commented on 1 week(s) ago
தமிழகத்தில் மற்ற மாவட்டங்கள் பற்றி தெரியவில்லை!ஆனால் கோவையில் மதுபிரியர்களின் வேகமும் ஆர்வமும் கொஞ்சம் குறைந்து இருப்பது நல்ல வழிக்கான ஆரம்பமே!மிக்க மகிழ்ச்சி! டாஸ்மாக் கடைகளை திறந்த முதல் நாள் பலமணி நேரம் கால்கடுக்க வரிசையில் நின்றதையும், லத்திஅடிக்கு சிக்காமல் சமாளிக்கும் வீடியோ காட்சியை எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என்று தெரியவில்லை! இந்த ஊரடங்கு தளர்வு நேரத்தில் தம் குடும்பத்தற்காகவும், உடனேவிடமுடியாத குடிக்காகவும், உழைத்து சம்பாதிக்க நினைக்கும் தன்மான தொழிலாளர் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்!
Subscribe to our Youtube Channel


Telegram_Side
Insta_right
mobile_App_right
fb_right
Twitter_Right