வங்கிக் கடன் தவணைகளை செலுத்த மேலும் 3 மாதம் அவகாசம்- ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

 Courtesy : Maalaimalar  Friday, May 22, 2020  02:02 PM   No Comments

வங்கிக் கடன் தவணைகளை செலுத்துவதற்கு கூடுதலாக 3 மாத காலம் அவகாசம் வழங்கப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வரி வசூலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 17% ஆக குறைந்துள்ளது. உற்பத்தி நடவடிக்கைகள் 21% குறைந்துள்ளது. முக்கிய தொழில் நிறுவனங்களின் உற்பத்தி 6.5% அளவிற்கு சரிந்துள்ளது.2020-21 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி எதிர்மறையான அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, நிதியாண்டின் இரண்டாம் பாதியில் சில முன்னேற்றம் இருக்கும்.

வங்கிக்கடன் தவணைகளை செலுத்த கூடுதலாக மூன்று மாத அவகாசம் (ஆகஸ்ட் 31ம் தேதி வரை) வழங்கப்படுகிறது. மேலும் 3 மாதங்களுக்கு சிறு தொழில் கடன் வழங்கவும் ஏப்றாடுசெய்யப்பட்டுள்ளது. இதற்காக 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் 4.40 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இதேபோல் ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டதன்மூலம் வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைய வாய்ப்பு உள்ளது.Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
web right
Web Right