இன்றைய தினம் - மே 23

 Saturday, May 23, 2020  08:16 AM

உலக ஆமைகள் தினம்

நிதானத்திற்காக பெயர் போன ஆமைகள், பெரும்பாலும் அனைத்து தட்ப வெப்ப சூழலிலும், வாழக் கூடிய இந்த ஆமை, ஒரு உயிரினம் என்பதிற்கும் மேல் கலை, இலக்கியம் எனப் பலப் பரிமாணங்களில் வலம் வருகிறது. அழிந்து வரும் உயிரினமான ஆமைக்கு ஆமைகள் தினம் கொண்டாடுவதன் மூலம், அவற்றின் அத்தியாவசியத்தை உறுதிப்படுத்துவதாக அமையும். இது ஆமைகளைப் பாதுகாக்க மற்றும் செல்லப் பிராணிகளாகப் பராமரிக்க ஊக்குவிப்பதாக அமையும்.

1911 – நியூயார்க் பொது நூலகம் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது.

1948 – இசுரேலுக்கான அமெரிக்கத் தூதுவர் தோமசு வாசென் எருசலேம் நகரில் கொலை செய்யப்பட்டார்.

1993 – எரித்திரியா ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது.

1995 – ஜாவா நிரலாக்க மொழியின் முதற் பதிப்பு வெளியானது.

1998 – வட அயர்லாந்தில் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் பெல்பாஸ்ட் உடன்பாட்டை 75% மக்கள் ஏற்றுக் கொண்டனர்.


yt_middle
2006 – அலாஸ்காவின் சுழல்வடிவ எரிமலை கிளீவ்லாந்து வெடித்தது.

2008 – அனைத்துலக நீதிமன்றம் 'நடுப் பாறைகள்' என்ற குன்றை மலேசியாவுக்கும், வெண்பாறைத் தீவை சிங்கப்பூருக்கும் கையளித்துத் தீர்ப்புக் கூறியது. இதனை அடுத்து இரு நாடுகளுக்கு இடையில் இருந்து வந்த 29-ஆண்டு கால பிணக்கு தீர்க்கப்பட்டது.

1967 – ரகுமான், தென்னிந்தியத் திரைப்பட நடிகர் பிறந்த தினம்

1987 – சதீஸ், தமிழகத் திரைப்பட நடிகர் பிறந்த தினம்

1974 – டி. ஏ. மதுரம், தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகை, பாடகி (பி. 1918) நினைவு தினம்

1981 – உடுமலை நாராயணகவி, தமிழகத் திரைப்படப் பாடலாசிரியர் (பி. 1899) நினைவு தினம்

2016 – பி. ஆர். தேவராஜ், தமிழ்த் திரைப்பட இயக்குநர் நினைவு தினம்yt_customPlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Insta_right
Twitter_Right
Telegram_Side
fb_right
mobile_App_right