அம்மா உணவகத்தில் உணவருந்திய அமைச்சர்.!!


Source: Courtesy : updatenews360
 Saturday, May 23, 2020  10:33 AM

கோவை அரசு மருத்துவமனையில் இன்று ஆய்வுக்கு பிறகு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாவட்ட ஆட்சியர் ராசமாணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மா உணவகத்தில் உணவு உண்டனர்.


yt_middle
கோவையில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நவீன சிகிச்சைக்கான உபகரனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதில் பிரபல குளிர்பான தயாரிப்பு நிறுவனமான கால்ஸ் பிவரேஜ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கோவை அரசு மருத்துவமனைக்கு 9.8 லட்சம் ரூபாய் மதிப்பில் அதிநவீன வென்டிலேட்டர் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்த இயந்திரத்தின் செயல்பாட்டை அமைச்சர் எஸ்பி வேலுமணி துவக்கிவைத்தார். மேலும் அரசு மருத்துவமனை வளாகத்திலுள்ள அம்மா உணவகத்தை ஆய்வு செய்து அங்கேயே உணவு உட்கொண்டார். அமைச்சருடன் ஆட்சியர் ராசமணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உணவு உண்டனர். தொடர்ந்து தரமான உணவுகளை சமைத்து வழங்க வேண்டும் என சமையலர்களுக்கு அறிவுரை வழங்கிச் சென்றார் அமைச்சர். இதை பார்த்த மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.


yt_custom



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Telegram_Side
Insta_right
fb_right
Twitter_Right
mobile_App_right