தமிழகத்தில் இன்று புதிதாக 759 பேருக்கு கொரோனா

 Saturday, May 23, 2020  10:31 PM

தமிழகத்தில் இன்று மேலும் 759 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி, கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 753 ஆக இருந்தது.மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து 7 ஆயிரத்து 128 பேர் குணமடைந்திருந்தனர். ஆனாலும், மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 98 ஆக இருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய நிலவரத்தை மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

yt_custom

அந்த தகவலின்படி, மாநிலத்தில் இன்று புதிதாக 759 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 512 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 491 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும், கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளது.


yt_middlePlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Insta_right
mobile_App_right
Telegram_Side
Twitter_Right
fb_right