சென்னையில் மட்டும் 624 பேர் - மாவட்ட வாரியாக இன்றைய விவரம்


Source: Source : Maalaimalar
 Saturday, May 23, 2020  10:36 PM

தமிழகத்தில் இன்று புதிதாக 759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.

தமிழகத்தில் இன்று 759 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 710 பேர் உள்மாநிலத்தை சேர்ந்தவர்கள். 37 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்.

எஞ்சிய 12 பேர் ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பி தனிமைப்படுத்தப்பட்டு முதல் பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவு வந்து இன்று எடுக்கப்பட்ட இறுதி கட்ட பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர் ஆகும்.

இதனால் தமிழகத்தில் கொரோனா பரவியர்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 512 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவர்களில் வைரஸ் உறுதி செய்யப்பட்ட சிலர் விமான நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 ஆயிரத்து 915 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 7 ஆயிரத்து 491 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளது.

உள்மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-

செங்கல்பட்டு - 39
சென்னை - 624
கடலூர் - 1
காஞ்சிபுரம் -13
மதுரை - 1
புதுக்கோட்டை - 1
ராணிப்பேட்டை - 1
தென்காசி - 2
தேனி - 1
திருவள்ளூர் - 17
திருவண்ணாமலை - 6
விழுப்புரம் - 4

yt_custom

மொத்தம் - 710

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவர்களில் இன்று வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள்:-

ராஜஸ்தானில் இருந்து சென்னை திரும்பியவர்கள் - 1
மகாராஷ்டிராவில் இருந்து கடலூர் திரும்பியவர்கள் - 1
உத்தரபிரதேசத்தில் இருந்து மதுரை திரும்பியவர்கள் - 1
மேற்கு வங்காளத்தில் இருந்து ராமநாதபுரம் திரும்பியவர்கள் - 3
மகாராஷ்டிராவில் இருந்து சேலம் திரும்பியவர்கள் - 2
தெலுங்கானாவில் இருந்து சேலம் திரும்பியவர்கள் - 1
ராஜஸ்தானில் இருந்து திருவள்ளூர் திரும்பியவர்கள் - 5
மகாராஷ்டிராவில் இருந்து திருவண்ணாமலை திரும்பியவர்கள் - 4
ஆந்திராவில் இருந்து திருவண்ணாமலை திரும்பியவர்கள் - 1
மகாராஷ்டிராவில் இருந்து தூத்துக்குடி திரும்பியவர்கள் - 5
மகாராஷ்டிராவில் இருந்து திருநெல்வேலி திரும்பியவர்கள் - 11
டெல்லியில் இருந்து விருதுநகர் திரும்பியவர்கள் - 1
மகாராஷ்டிராவில் இருந்து விருதுநகர் திரும்பியவர்கள் - 1

மொத்தம் - 37

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பி முதல்கட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என வந்து தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் (விமான நிலைய தனிமைப்படுத்தல்):-

லண்டனில் இருந்து திரும்பியவர்கள் - 7
பிலிப்பைன்சில் இருந்து திரும்பியவர்கள் - 5

மொத்தம் - 12

இந்த விவரங்களின் அடிப்படையில் (710+37+12) தமிழகத்தில் இன்று 759 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


yt_middle



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Twitter_Right
Insta_right
mobile_App_right
fb_right
Telegram_Side