தக்காளி விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி.. இன்னும் ஒரு மாதத்திற்கு இதே விலை நீடிக்குமாம்..

 Thursday, November 25, 2021  06:29 AM   No Comments

கோவையில் தக்காளில் கிலோ 100 முதல் 120 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. தங்கம் விலையைப் போல, மணிக்கொரு முறை மாறிக் கொண்டிருக்கிறது.இதனால், தக்காளியை அறுவடை செய்யும் பருவத்தில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். கடந்த 25--30 நாட்களுக்குள் தக்காளி நடவு செய்த விவசாயிகள், இன்னும் ஒரு மாதத்துக்குள் காய் பறிக்கலாம் என்பதால், நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

asd


தக்காளியின் விலை குறைந்தது ஒரு மாதத்துக்கு இப்படியே நீடிக்கும். கடந்த மாதம் நடவு செய்த தக்காளி, இன்னும் மூன்று வாரத்தில் வரத்துவங்கி, நான்காவது வாரத்தில் இருந்து அதிகரித்து விடும். ஒரு வேளை இன்னும் 25 நாட்களில் அடுத்த மழை பெய்தால், அப்போது அறுவடைக்கு தயாராக இருக்கும் தக்காளி பாதிக்கப்படும்.ஆனால், இன்னும் இப்போது நடவு செய்யும் இளம் பட்ட தக்காளிகள் தப்பித்து விடும். மேலும் சில வாரங்களுக்கு தக்காளி விலையுயர்வு நீடிக்கும். என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.



Similar Post You May Like




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel