விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: எள் பூரண கொழுக்கட்டை

 Friday, August 21, 2020  10:55 PM   No Comments

இந்த விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு வகையான கொழுக்கட்டைகளை செய்வது எப்படி என்று பார்க்கலாம். இன்று எள் பூரண கொழுக்கட்டை செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

மேல் மாவு செய்ய:

கொழுக்கட்டை மாவு - ஒரு கப்,
தண்ணீர் - ஒன்றே கால் கப்,
உப்பு சிட்டிகை, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

பூரணம் செய்ய :

கறுப்பு எள் - 50 கிராம்,
வெல்லம் - 50 கிராம்,
ஏலக்காய் - 2.



செய்முறை :

தண்ணீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும்.

அதனுடன் கொழுக்கட்டை மாவை சேர்த்து கைவிடாமல் கிளறி இறக்கவும்.

ஆறியதும் கைகளால் கட்டியில்லாமல் நன்கு அழுத்தி பிசையவும். இதுவே மேல் மாவு.

எள்ளை 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து களையவும். பிறகு தட்டில் பரவலாக கொட்டி வெயிலில் காய விடவும்.

வெறும் வாணலியில் காய்ந்த எள்ளை சேர்த்து வெடிக்கும் வரை வறுத்தெடுக்கவும்.

அதனுடன் ஏலக்காய், வெல்லம் சேர்த்து மிக்சியில் அரைத்தெடுக்கவும். இதுவே பூரணம்.

மேல் மாவை சிறிய கிண்ணங்களாக்கி நடுவே சிறிதளவு பூரணம் வைத்து மூடி ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.

சூப்பரான எள் பூரண கொழுக்கட்டை ரெடி.



Similar Post You May Like

  • நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி பருப்பு தோசை

     Fri, April 23, 2021 No Comments Read More...

    தர்பூசணியில் அதிகளவு நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இன்று நாம் பார்க்க இருப்பது தர்பூசணி பருப்பு தோசை. சரி, இந்த ரெசிபியை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம். தேவையான பொருட்கள்: தர்பூசணியின் வெள்ளை நிற த

  • வாங்க சிக்கன் நூடில்ஸ் செய்யலாம்...

     Sun, March 7, 2021 No Comments Read More...

    குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் சிக்கன் நூடுல்ஸ் என்றால் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். இன்று எளிய முறையில் சிக்கன் நூடுல்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையா

  • காரசாரமான காய்ந்த மிளகாய் சட்னி

     Thu, February 25, 2021 No Comments Read More...

    மல்லிகைப்பூ இட்லியும் காரசாரமான மிளகாய் சட்னிக்கு ஈடில்லா இணையாகும். எளிதாக இருந்தாலும் சுவையோ அலாதி. காய்ந்த மிளகாயிலும் பச்சை மிளகாயிலும் பீட்டா கரோட்டின் என்கிற விட்டமின் ஏ சத்தானது அதிகம். தேவை




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel