தமிழகத்தில் 3501 நகரும் ரேஷன் கடைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைக்கிறார்.

 Monday, September 21, 2020  10:30 AM   No Comments

கடந்த சட்டசபை மானிய கோரிக்கை கூட்டத் தொடரின் போது பேரவை விதி எண் 110-இன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார் முதல்வர். அப்போது அம்மா நகரும் நியாய விலை கடைகள் திட்டம் தொடங்கப்படும் என தெரிவித்திருந்தார்.அதன்படி ரூ 9.66 கோடி மதிப்பீட்டில் 3501 நியாயவிலைக் கடை திட்டம் தொடங்கப்படுகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 262 கடைகளும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 212 கடைகளும், மாவட்டத்தில் 168 கடைகளும் தமிழகம் முழுவதும் நகரும் நியாய விலை கடைகள் தொடங்கப்படவுள்ளன. இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 5.36 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவர். மலைப்பாங்கான பகுதிகள், காட்டுப் பகுதிகளில் வசிப்போருக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த கடைகள் தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைக்கிறார்.Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

web right
Web Right
Web Right