மேட்டுப்பாளையம் உருவான சுவாரஸ்ய வரலாறு - ஒரு சிறப்பு தகவல்கள்

 Saturday, April 24, 2021  10:19 AM   No Comments

வனமும் வனம் சார்ந்த வாழ்வுமே இயற்கையிலாளருமான முகமது அலியின் அடையாளம். 'காட்டுயிர்’ என்ற மாத இதழையும், 'அழியும் பேருயிர்: யானைகள்’ என்ற புத்தகம் மூலமும் சூழலியல் பிரச்னைகளை உணரவைத்தவர். 'இயற்கை வரலாறு அறக் கட்டளை’ யின் நிறுவனர்களில் ஒருவர், இங்கே தனது ஊரான மேட்டுப்பாளையம் பற்றி பகிர்ந்துகொள்கிறார்.

தெற்கு நீலகிரியின் அடிவாரத்தில் முல்லைக்காடுகள் சூழ்ந்த மேட்டுப் பாளையத்தில், பவானி ஆற்றங்கரையோர வலையர் தெருவில் ஒரு கூரை வீட்டில் பிறந்தேன். பிறப்பில் இருந்து இறப்பு வரை கூடவே வருவதால், மேட்டுப்பாளையத்து மனிதர்களுக்குக் காடுகள் மீது எப்போதும் அச்சம் இருந்தது இல்லை.

மேட்டுப்பாளையத்தின் இயற்பெயர் 'சிக்கதாசம்பாளையம்’. உதகை இருப்புப் பாதை இந்தக் குக்கிராமம் வழியாகப் போடப்பட்ட பின்புதான் மேட்டுப் பாளை யமாக மாறியது. 1895-ல் இங்கு தொடங்கப்பட்ட லண்டன் மிஷன் ஸ்கூல், சுதந்திரத்துக்குப் பிறகு, சி.எஸ்.ஐ. பள்ளி என்று பெயர் மாற்றம் பெற்றது. உதகை முதன்மை சாலையில் இருக்கும் அந்தப் பள்ளிக்கு நான் சிறு வனாக இருந்தபோது, பிரதமர் நேரு வின் ஊட்டி வருகையை ஒட்டி நீண்ட காலத்துக்குப் பிறகு வர்ணம் அடிக்கப்பட்டது. நேருவின் வருகைக் காக, மாணவர்களாகிய நாங்கள் சாலையின் இருபுறமும் அமரவைக்கப் பட்டது மனக் கண்ணில் இப்போதும் மின்னி மறையும் காட்சி!

மேட்டுப்பாளையத்தின் மேற்குப் பகுதியில், தாழ்வான கண்டியூர் மலைத் தொடர்களும், வடக்குப் பகுதியில் நீலகிரித் தொடரும் அமைந்திருக்க... இவற்றின் இடையேதான் வானியாறு எனப்படும் பவானி ஆறு, ஜீவ நதியாக வளைந் தோடியது. முல்லைக் காடுகள் முடியும் இடத்தில் இருந்து, தெற்கே அன்னூர், அவிநாசி, திருப்பூர், தாராபுரம் நோக்கி புல்வெளிக் காடுகள் விரிந்துகிடந்தன. அதில்தான் வரகுக் கோழிகளும், கான மயில்களும், வெளி மான்களும் வாழ்ந்தன. வன விலங்குகளின் வசந்த பூமியாக ஒரு காலத்தில் திகழ்ந்தது மேட்டுப்பாளையம். ஆனால், என்று மனிதன் வனத்தை அழித் துத் தின்ன ஆரம்பித்தானோ, அன்றே தன்னையே உருக்கிக்கொள்ள ஆரம்பித் தது மேட்டுப் பாளையம்.கடந்த 1950-களில் காட்டு யானை ஒன்று சுட்டுக் கொல் லப்பட்ட இடம்தான் இன்று நெருக்கடி மிகுந்த வேளாங் கண்ணி நகர். காட்டு யானை பிடிப்பவர்கள் சங்கமித்த வனப் பகுதிதான் இன்று ஆனைக்காரத் தெரு. இந்திய அளவில் முதல் முறை யாக மேட்டுப்பாளையத்தில் தான் நானும் நண்பர் யோகானந்தும் 'பிளாக் பக்’ எனப்படும் வெளிமான்களைக் கண்டுபிடித்தோம். ஐரோப்பாவில் இருந்து வலசை வரும் பறவை மேட்டுப்பாளையத்துக்கு வந்ததையும், பிறகு பவானிசாகர் செல்வதையும் கண்டு பதிவு செய் தோம். அன்று எங்கள் ஊரைச் சுற்றி எங்கு பார்த்தாலும் மான்கள், காட்டு எருதுகள், யானைகள் கண்ணில் படும். அவற்றின் வலசைப் பாதைகள் நாற்புறமும் அமைந்து இருந்தன.

ஆனால், இன்றோ அவற்றின் பாதைகள் ஆக்கிரமிப்பில் அழிந்து போய்விட்டன. கல்லார் பழப் பண்ணை ஒரு காலத்தில் ராஜ நாகங்கள் கொத்துக் கொத்தாக வாழ்ந்த பகுதி. இரண்டாம் உலகப் போரின்போது இங்கு வந்த ராணுவத் தளபதி ஆடம்ஸ், அந்தப் பாம்புகளைக் கண்டு வியந்து, 'பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கத்தின் சஞ்சிகை’யில் பதிவு செய்துள்ளார்.

இப்படி இருந்த மேட்டுப்பாளையம், இன்று ரியல் எஸ்டேட் புள்ளிகளின் காலடியில். மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோயில் இன்று தமிழகத்தின் புகழ்மிக்க கோயில்களில் ஒன்று. இந்தக் கோயிலுக்கு அருகே உள்ள நெல்லி மலைக் குன்றுகளில் ஒன்று தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு யானை படுத்து இருப்பதுபோலக் காட்சி அளிக்கும்.

ஒரு காலத்தில் நீலகிரியில் விளைந்த ஆரஞ்சு, மங்குஸ்தான், சூரி, நாவல் போன்ற பழங்கள் மாட்டு வண்டிகளில் வந்து இறங்கின. ஆனால், இன்று தேயிலை, முட்டைகோஸ், உருளைக் கிழங்கைத் தவிர, வேறு எதுவும் பெரிதாகக் கண்ணில்படுவது இல்லை. இந்த ஊரின் பாரம்பரியம், தொன்மை, பூர்வகுடித் தன்மை ஆகியவற்றைச் சிதைந்துவிடாமல் பாதுகாக்கவும், இலக்கியம் மற்றும் சமூக நற்பணி விஷயங்களை உரம் ஊட்டி வளர்க்கவும் அமைப்புகள் எதுவும் இல்லை. அதுவே என் பெரும் மனக் குறை!

மேட்டுப்பாளையம் இப்போது அடியோடு மாறிவிட்டது. எங்கள் கணக்கெடுப்பின்படி, ஆற்றின் இரு கரைகளிலும் இரண்டு கி.மீ. நீளத் துக்கு சுமார் 2,500 பேர் மலம் கழிக்கின்றனர்; 4,000 பேர் குளிக்கின்றனர். இதை எல்லாம் தாண்டி, சமீபத்தில் ஒரு வட இந்திய அநா கரிகப் பழக்கம் ஒன்று இங்கே இறக்குமதி ஆகி உள்ளது. ஆம், காசியைப்போல் பிணங்களின் சாம்பல் ஆற்றில் கரைக்கப்படுகிறது. வனங்களையும் விளை நிலங்களையும் வளர்க்கப் பிறப்புஎடுத்த என் பவானி, இப்படி சின்னாபின்னமாகி சிறு மைப்படுவதைப் பார்த் தால் விழியோரம் நீர் கசிகிறது!''Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel