கோவையில் தனிமையில் இருக்காமல் ஊர் சுற்றிவந்த கொரோனா நோயாளியை போலீசார் கைது செய்தனர்

 Sunday, April 25, 2021  06:11 AM   No Comments

கோவை, காளப்பட்டி பகுதியை சேர்ந்த ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்டு வீட்டிலேயே 7 நாட்கள் தனிமையில் இருக்க சுகாதாரத்துறையினர் அனுமதித்திருந்தனர். அவர் வீட்டை விட்டு வெளியேறி பீளமேடு பகுதியில் சுற்றி திரிந்துள்ளார், இந்த தகவலை அறிந்து ஆம்புலன்ஸ் மூலம் விரைந்து வந்த சுகாதாரத்துறையினர் அவரை பிடித்து கொடிசியா அரங்கிற்கு கொண்டு சென்றனர்.நோய்த்தொற்று தடுப்பு சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மை விதிகளின்படி, அவர்மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

கோவை மாநகராட்சி பகுதியில், நாளொன்றுக்கு, 450க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. லேசான அறிகுறி இருப்பவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என, சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது. இதனை பயன்படுத்தி சிலர் அத்துமீறுவதால் மற்றவர்களுக்கும் அது பிரச்சனையில் முடிந்துவிடுவதை இதுபோன்ற ஆட்கள் மனதில் கொள்வதில்லை.Similar Post You May Like

 • முழு ஊரடங்கு காலத்தில் எவை எவைக்கு அனுமதி?

   Sat, May 8, 2021 No Comments Read More...

  தேநீர்க் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும் அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை மட்டும் வழங்க அனுமதிக்கப்படும் மளிகை, காய்கறி, இறைச்சிக் கடைகள் நண்பகல் 12 மணி வரை திறந்திர

 • முழு ஊரடங்கு காலத்தில் எவை எவைக்கு தடை?

   Sat, May 8, 2021 No Comments Read More...

  முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது சாலையோர உணவகங்கள் இயங்க தடை அனைத்து தனியார் அலுவலகங்களும் இயங்கத் தடை விதிக்கப்படுகிறது மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இட

 • தமிழகத்தில் வரும் 10ந் தேதி முதல் 24ந் தேதி வரை முழு ஊரடங்கு

   Sat, May 8, 2021 No Comments Read More...

  10ந் தேதி காலை 4 மணி முதல் 24ந் தேதி காலை 4 மணி வரை ஊரடங்கு முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை மட்டும் வழங்க அனுமதிக்கப்படும் தேநீர்
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel