இன்று முழு ஊரடங்கு; தவறாமல் கடைபிடிப்போம்

 Sunday, April 25, 2021  06:17 AM   No Comments

தமிழகத்தில் கட்டுக்கடங்காமல் கொரோனா தொற்று பரவிவருவதால் அரசு தினமும் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஒருநாள் முழு ஊரடங்கு விதித்துள்ளது. நேற்று இரவு 10 மணி முதல் நாளை அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு இருக்கிறது. இதனை அனைவரும் கருத்தில்கொண்டு தவறாமல் கடைபிடிப்போம்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தினமும் முழு ஊரடங்கு விதித்தால் அது பல ஏழை மக்களின் வாழ்வாதாரத்திற்கு சிக்கலை ஏற்படுத்திவிடும் என்பதால் இதுபோன்ற வார இறுதிநாட்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் மதித்து கடைபிடித்தால் மிகவிரைவிலேயே கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இயலும்.



அத்தியாவசிய பணிகளான, பால், பத்திரிக்கை வினியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்திகள், அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளை பொருட்கள், எரிபொருள் எடுத்துச் செல்லும் வாகனங்கள், உள்ளிட்ட வாகனங்களுக்கு அனுமதி உண்டு. ஓட்டல்களில், காலை, 6:00 முதல், காலை, 10:00 மணி வரையிலும், மதியம், 12:00 முதல், மாலை, 3:00 மணி வரை, மாலை 6:00 முதல், இரவு, 9:00 மணி வரை, பார்சல்களுக்கு மட்டும் அனுமதி உண்டு.

அரசின் கட்டுப்பாடுகளை மீறி, அனாவசியமாக ரோட்டில் வாகனங்களில் சுற்றுவோர், அபராதம், வாகனப்பறிமுதல், வழக்கு ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டும்.

அதனால் அனைவரும் இன்று ஒருநாள் வீட்டிலேயே இருப்போம் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவருவோம்.



Similar Post You May Like

  • முழு ஊரடங்கு காலத்தில் எவை எவைக்கு அனுமதி?

     Sat, May 8, 2021 No Comments Read More...

    தேநீர்க் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும் அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை மட்டும் வழங்க அனுமதிக்கப்படும் மளிகை, காய்கறி, இறைச்சிக் கடைகள் நண்பகல் 12 மணி வரை திறந்திர

  • முழு ஊரடங்கு காலத்தில் எவை எவைக்கு தடை?

     Sat, May 8, 2021 No Comments Read More...

    முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது சாலையோர உணவகங்கள் இயங்க தடை அனைத்து தனியார் அலுவலகங்களும் இயங்கத் தடை விதிக்கப்படுகிறது மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இட

  • தமிழகத்தில் வரும் 10ந் தேதி முதல் 24ந் தேதி வரை முழு ஊரடங்கு

     Sat, May 8, 2021 No Comments Read More...

    10ந் தேதி காலை 4 மணி முதல் 24ந் தேதி காலை 4 மணி வரை ஊரடங்கு முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை மட்டும் வழங்க அனுமதிக்கப்படும் தேநீர்




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel