தமிழகத்தில் நாள்தோறும் புதிய உச்சம்: கொரோனா தொற்று 15 ஆயிரத்தை எட்டுகிறது

 Sunday, April 25, 2021  11:00 AM   No Comments

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

தமிழகத்தில் நேற்றைய (சனிக்கிழமை) கொரோனா பாதிப்பு பற்றி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 22 ஆயிரத்து 671 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 8 ஆயிரத்து 874 ஆண்கள், 5 ஆயிரத்து 968 பெண்கள் என மொத்தம் 14 ஆயிரத்து 842 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 43 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 557 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 2 ஆயிரத்து 15 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர்.



நேற்று அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக சென்னையில் 4 ஆயிரத்து 86 பேரும், செங்கல்பட்டில் ஆயிரத்து 163 பேரும், கோவையில் ஆயிரத்து 4 பேரும், குறைந்தபட்சமாக நீலகிரியில் 84 பேரும், அரியலூரில் 33 பேரும், பெரம்பலூரில் 19 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

80 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 18 லட்சத்து 80 ஆயிரத்து 174 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 10 லட்சத்து 66 ஆயிரத்து 329 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 6 லட்சத்து 43 ஆயிரத்து 698 ஆண்களும், 4 லட்சத்து 22 ஆயிரத்து 593 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேரும் அடங்குவர்.

அதில் 12 வயதுக்கு உட்பட்ட 38 ஆயிரத்து 656 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 48 ஆயிரத்து 484 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 39 பேரும், தனியார் மருத்துவமனையில் 41 பேரும் என 80 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர்.



Similar Post You May Like

  • முழு ஊரடங்கு காலத்தில் எவை எவைக்கு அனுமதி?

     Sat, May 8, 2021 No Comments Read More...

    தேநீர்க் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும் அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை மட்டும் வழங்க அனுமதிக்கப்படும் மளிகை, காய்கறி, இறைச்சிக் கடைகள் நண்பகல் 12 மணி வரை திறந்திர

  • முழு ஊரடங்கு காலத்தில் எவை எவைக்கு தடை?

     Sat, May 8, 2021 No Comments Read More...

    முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது சாலையோர உணவகங்கள் இயங்க தடை அனைத்து தனியார் அலுவலகங்களும் இயங்கத் தடை விதிக்கப்படுகிறது மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இட

  • தமிழகத்தில் வரும் 10ந் தேதி முதல் 24ந் தேதி வரை முழு ஊரடங்கு

     Sat, May 8, 2021 No Comments Read More...

    10ந் தேதி காலை 4 மணி முதல் 24ந் தேதி காலை 4 மணி வரை ஊரடங்கு முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை மட்டும் வழங்க அனுமதிக்கப்படும் தேநீர்




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel